புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி கொ.மா.கோதாண்டம்

வணக்கம்.


தமிழ் இலக்கிய உலகத்துக்கு நன்கு அறிமுகமானவர் இராஜபாளையம் பன்மொழிப் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள். மு.கு.ஜகந்நாதராஜா அவர்களைப் பற்றி அவரது நெருங்கிய நண்பரும் அவருக்குப் பின்னர் மணிமேகலை கலைமன்றத்தைத் தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வருபவருமான டாக்டர்.கொ..கோதண்டம் அவர்கள் வழங்கும் ஒரு சிறப்புப் பேட்டியைத் தாங்கி இம்மாத மண்ணின் குரல் ஒலிப்பதிவு இதழ் இப்பகுதியில்வெளிவருகின்றது.




குறிஞ்சிச் செல்வர் என்று சிறப்பித்து அழைக்கப்படும் டாக்டர். கொ.மா.கோதாண்டம் அவர்கள் தமிழில் குறிஞ்சி நிலம் பற்றியும், குறிப்பாக வன இயல், தாவரவியல், விலங்கியல் போன்ற துறைகளில் இலக்கியம் படைத்துள்ளவர். இதுவரை ஏறக்குரை 90 நூல்கள் இவரது படைப்புக்களாக வெளிவந்துள்ளன. புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்களுடன் நெருங்கிய நட்புடன் இருந்து ஆய்வுகளில் ஈடுபட்டவர். இவர் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி எழுதிய கட்டுரை ஒன்று தினமணியில் வெளிவந்துள்ளது. அதன் பதிவை நமது வலைப்பக்கத்தில் இங்கே காணலாம்.

இந்தப் பிரத்தியேக பேட்டியில் நமக்காக புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றி தனது கருத்துக்களைப் இவர் பகிர்ந்து கொள்கின்றார்.

இம்மாத மண்ணின் குரல் வெளியீட்டில் இப்பேட்டி ஒலிப்பதிவின் இரண்டு பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒலிப்பதிவு கோப்புக்கள் ஒவ்வொன்றும் ஏறக்குறைய 10 நிமிடங்கள் இடம்பெறுகின்றன.


பகுதி 1.

இப்பகுதியில் புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் இலக்கியப் பணிகளை விவரிக்கின்றார் கொ.மா.கோதாண்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் வரலாற்றை தெலுங்கில் கிருஷ்ணதேவராயர் எழுதினார். கடின தெலுங்கில் அமைந்த அந்த நூலை புலவர் மு.கு.ஜகந்நாதராஜா அவர்கள் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றார். இந்த நூல் ஒரு மொழி பெயர்ப்பு நூலுக்க்கான சாகித்ய அக்காடமி பரிசு பெற்ற முதல் நூல் என்ற பெருமை பெற்றது என்றும் புலவர் மு.கு.ஜகந்நாதராஜா புறநானூறு முத்தொள்ளாயிரம் ஆகிய சங்க இலக்கியங்களை தெலுங்கில் மொழி பெயர்த்தமை பற்றியும் விவரிக்கின்றார்.

பகுதி 2.

பூதலப்பட்டு ஸ்ரீ ராம ரெட்டி என்பவர் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், மணிமேகலை பெரியபுராணம் போன்ற தமிழ் காவியங்களை மொழிபெயர்த்திருக்கின்றார். அதற்குப் பிறகு யாரும் தமிழ் இலக்கியங்களை தெலுங்கில் மொழிபெயர்க்காத நிலையில் இவர் புறநானூற்றை தெலுங்கில் மொழி பெயர்த்தார்.

புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பாலி மொழியறிவும் கொண்டிருந்தமையால் சில சமண பௌத்த நூல்களையும் தமிழிற்கு மொழி பெயர்த்துள்ளார்.

புலவர் மு.கு.ஜகந்நாதராஜாவின் இல்லத்தில் உள்ள ஜகந்நாதராஜா நூலகத்தில் அவரது அனைத்து நூல்களும், கையெழுத்துப் பிரதிகளும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இப்பேட்டியில் இந்த நூலகத்தைப் பற்றியும் டாக்டர். கொ.மா.கோதாண்டம் விவரிக்கின்றார்.

மணிமேகலை காப்பியத்தில் அளப்பற்ற ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் புலவர் மு.கு.ஜகந்நாதரா அவர்கள் 1958-ஆம் ஆண்டில் ராஜபாளையத்தில் மணிமேகலை கலைமன்றத்தை உருவாக்கியிருக்கின்றார். இவரோடு டாக்டர். கொ.மா.கோதாண்டம் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து இக்கலைமன்றத்தின் வழியாக பல இளைஞர்களைப் பல்லாண்டுகளாக இலக்கியத்தில் ஈடுபட ஊக்கமளித்து வளர்த்து வந்திருக்கின்றனர். மணிமேகலை கலைமன்றத்தின் நடவடிக்கைகள் செயல்பாடுகள் போன்றவற்றை தற்போது தலமைப் பொறுப்பில் இருந்து பல இலக்கியப் பணிகளைச் செய்து வருபவர் டாக்டர். கொ.மா.கோதாண்டம் அவர்கள்.

இப்பேட்டிகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைன் மண்ணின் குரலில் கேட்டு மகிழலாம்.

இப்பேட்டி கடந்த மார்ச் மாதம் நான் தமிழகத்திற்குச் சென்றிருந்த சமையம் நேரடியாக ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்பேட்டியின் ஏனைய பகுதிகள் அடுத்தடுத்த மாத மண்ணின் குரலில் பகிர்ந்து கொள்ளப்படும்.

இந்த பேட்டிக்கான ஏற்பாட்டில் உதவியவர்கள்: திருமதி.சீதாலஷ்மி, திருமதி.மதுமிதா மற்றும் அவர் கணவர், திரு.எஸ்.ராமச்சந்திரன், திரு.ரகுபதிராஜா ஆகியோர். அவர்களுக்கும் என்னுடன் துணையாக ராஜபாளையம் வந்திருந்து இவ்வொலிப்பதிவில் பங்கு கொண்ட திரு.திருமதி துரை அவர்களுக்கும் எனது நன்றி.


அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

3 comments:

RISHAN SHERIF | June 18, 2011 at 3:07 AM

அன்பு வணக்கங்கள்,

வலைப்பதிவுக்கு நான் புதியவன், வலைப்பதிவுகளை

அண்மையக் காலமாக படித்து வருகின்றேன். எழுத

வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இருந்தது இல்லை.

இருப்பினும் - மதம் சார்ந்த பகுத்தறிவை மக்களுக்கு,

குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு அளிக்க வேண்டும்

என்ற அவாவால் புதிய வலைப்பதிவை ஆரம்பித்து

எழுதுகின்றேன். உங்களைப் போன்றோரின்

கருத்துக்களை, வழிக்காட்டல்களை எதிர்ப்பார்க்கின்றேன்.

நன்றி !

ராம்ஜி_யாஹூ | June 18, 2011 at 3:21 AM

nice, many thanks

மதுரை சரவணன் | June 18, 2011 at 6:49 AM

nalla arimugam.... thotaravum.. vaalththukkal

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness