புத்திருக்கு (உள்மூலம்) மருந்து

மனிதர்களுக்கு மரண வேதனை தரும் நோய்களுள்  ஒன்று உள்மூலம். நவீன மருத்துவத்தில் பெரும் பொருட்செலவில்  அறுவைச்சிகிச்சை செய்கின்றனர். ஆனால் வலியே இல்லாமல் மூன்றே நாட்களில் இம் மூலிகை குணம் அளிக்கிறது. - காளைராசன் (காரைக்குடி)

ஒலிப்பதிவைக் கேட்க





நெஞ்சுறம் (காத்துவெட்டி மருந்து)

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பலருக்கும், மாடிப்படியில் தவறி விழுவோருக்கும் நெஞ்சில் அடிபடுகிறது.  இதற்கு வைத்தியம் செய்யப் பெரும் பொருள் செலவு ஆகிறது. வயதானோருக்குக் குணமாகத நிலையும் ஏற்படுகிறது.
இதற்கு காத்துவெட்டி இலை சிறந்த மருந்து.
ஒலிப்பதிவைக் கேட்கவும். -
காளைராசன் (காரைக்குடி)





கிணற்றுப்பாசான்

"தலையே வெட்டுப் பட்டாலும் இந்த மூலிகையின் இலையைப் பயன்படுத்தி ஒட்ட வைத்து விடலாம்", அதனால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது என்கின்றனர். இதன் பெயர்  கிணற்றுப்பாசான் என்றும் சொல்கின்றனர்.

சாலைகளின் ஓரங்களில் இதை வெகுவாகக் காணலாம். சிறுவர்கள் இதன் பூவைக் காம்புடன் பறித்துக் கையினால் பூவைச் சுண்டி விலையாடுவதையும் பார்த்திருக்கலாம்.


இதன் இலைகளைப் பறித்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடிசெய்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ள  வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட, தங்கப்பசுப்பம் சாப்பிட்டது போன்று  உடல் பொலிவு பெறும். பத்தியம் இல்லை.

மேற்கண்ட வைத்தியத்தைக் கூறியவர்: சிவகங்கை மாவட்டம் முடிகண்டம் கிராமம் காசிஸ்ரீ சோலைகிரி.

இதே மூலிகை வெட்டுக் காயங்களுக்கும் சிராய்ப்புக் காயங்களுக்கும் கண்கண்ட மருந்து. வயல்களில் மண்வெட்டிக்காயம், மரவேலை செய்யும் போது வெட்டுக்காயம் அடைந்தோர் இம்மூலிகையைப் பயன்படுத்துகின்றனர்.

தலைவெட்டி இலையைப் பறித்து கையில் வைத்துக் கசக்கிச் சாறு பிழிந்து காயத்தில் விட வேண்டும். டிஞ்சர் தடவியது போன்று எரிச்சல் ஏற்படும். வேதனையைப் பொருத்துக் கொள்ள வேண்டும். பத்தியம் இல்லை.
பக்க  விளைவுகள் ஏதும் ஏற்படாது.
நடைப்பயணத்தில் காயங்கள் ஏற்பட்டாலும்  இது ஒரு கண்கண்ட மருந்து.

சென்னையைச் சேர்ந்த திரு.தனசேகரன் அவர்களது அனுபவத்தைக் கூறினார். அவரது செவ்வியை இணைத்துள்ளேன். - காளைராசன்

பதிவைக் கேட்க 


குலவை

எங்களது குலதெய்வவழிபாட்டின்போது பதிவு செய்த குலவை ஒலிப்பதிவுகள் இரண்டை இத்துடன் இணைத்துள்ளேன்.  பல கோயில்களிலும் குலவைபோடுவதைக் கேட்டுள்ளேன்.  அப்போதெல்லாம் வழிபாட்டிலேயே கவனம் செலுத்திவிடுவதால் இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்தது கிடையாது. இனிமேல் குலவைபோடுவதை ஆராய்ந்து அவ்வப்போது எழுதுகிறேன்.  நேற்றுக்கூட மதுரை அழகர்கோயிலில் தீர்த்தமாடி யிருந்தபோது, சிங்கம்புணரி குலாளர்கள் குலவைபோட்டு குலசாமியை இறக்கிக் கும்பிட்டனர்.

பதிவு 1
பதிவு 2

அன்பன்
கி.காளைராசன்

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness