தமிழ் குமரன் - ஜெர்மனி
திரு.குமரன் ஐரோப்பிய தமிழர்கள் மத்தியில் அன்புடன் குமரன் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர். யாழ்ப்பாணத்திலிருந்து ஜெர்மனிக்கு குடியேறிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் இவரும் ஒருவர். கடந்த பல ஆண்டுகளாக இலண்டன் வானொலியான IBC தமிழில் ஈழத்தமிழர்கள் புலம்பெயர்வினைப் பற்றி தொடர்ந்து தமது ஆய்வினை வழங்கி வருபர்.
ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.