வியட்நாமில் தமிழ்க்குரல்!

சங்காலம் தொட்டுத் தமிழன் கிழக்கும், மேற்கும் பயணித்த வண்ணமேயுள்ளான். பல்வேறு காலக்கட்டங்களில் கிழக்கே பயணப்பட்டு அங்கேயே தங்கிவிட்ட தமிழர்கள் அந்தந்த கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்டனர். அவ்வகையில் வியட்நாம் நாட்டின் சைகோன் (ஹே சி மின்) நகரில் தங்கி அங்கு இந்துக் கோயில்களை உருவாக்கிவிட்டு பின் போர்ச்சூழலில் வியட்நாமை விட்டு வெளியேறிய தமிழர்களின் பண்பாட்டு எச்சம் இன்றளவும் காணக்கிடைப்பதாக உள்ளது. சைகோன் மாரியம்மன் கோவில் பூசாரியின் மகன் ரமேஷ் எங்களுடன் உரையாடிய போது பதிவு செய்த ஒலிப்பதிவு இங்கே!

குமாரபாளையும் எஸ்.எஸ்.எம் கல்லூரி ஸ்தாபகரின் புதல்வியும், அதன் தலைவர் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களின் மூத்த சகோதரியுமான திருமதி இராஜம்மாள், உடலியல் உபாதைகளுக்குத்தோற்றக்காரணி யாது எனும் கேள்விக்கு இங்கு பதிலளிக்கிறார். எப்போதும், ஈஷ்வர பட்டரைத் தியானித்து அவர் மூலமாக பதில் சொல்லும் திருமதி இராஜம்மாள் இப்பேட்டியின் இடையிலும் திடீரென்று தொடர்பு விட்டுப்போன வானொலி ஒலிபரப்பு போல் சில நொடிகள் அப்படியே பேசுவதை நிறுத்திவிடுகிறார். பின் விட்ட இடத்திலிருந்து ஒரு வானொலி செயல்படுவது தொடர்ந்து பேசிச் செயல்படுகிறார். கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டாலும் அவரது தெள்ளிய தமிழ் நம்மை ஆச்சர்யத்தில் வைக்கிறது.

இதோ அவரது பேட்டி!

ஆன்ம வளர்ச்சியின் படிகள் - திருமதி இராஜம்மாள் பேட்டி

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியின் ஸ்தாபகரும், கல்வியாளருமான திரு.மாரியப்ப செட்டி அவர்களின் குமாரத்தியாகிய திருமதி.இராஜம்மாள் அவர்கள் உயிர்ப்பின் ஆரம்பு நிலை, வளர்ச்சி பற்றியும், ஆன்மா எங்கிருந்து தன்னை வளப்படுத்திக்கொள்கிறது, அது எப்படி அழிவற்ற நிலையான வாழ்வை எட்டமுடிகிறது எனும் பொருள் பற்றி இங்கு பேசுகிறார். பள்ளியிறுதிவரை படிக்காத இராம்மாள் அறிவியல் உண்மைகளையெல்லாம் அழகு தமிழில் சொல்லும் போது, இவர்தான் பேசுகிறாரா? இல்லை இவருள் வேறொருவர் இருந்து கொண்டு பேசுகிறாரா? என்ற கேள்வி எழும். நாம் அவரிடம் கேட்டால், உண்மையில் தன்னுள்ளிருந்து ஈஷ்வர பட்டர் எனும் மகரிஷி பேசுவதாகச் சொல்கிறார். இச்செயற்பாட்டின் மூலமாக பல்வேறு நன்னெறி நூல்களை வெளியிட்டுள்ளார் திருமதி.இராஜம்மாள். குமாரபாளையத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து பௌர்ணமியன்று வழிபாடு செய்து எல்லோரும் உய்வுறும் வண்ணம் செயல்படுகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையும், எஸ்.எஸ்.எம் கல்லூரியும் இணைந்து உருவாக்கிய தமிழ் மரபு மையம் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது அம்மாவைப் பேட்டிகாண முடிந்தது. தமிழ் மரபு அறக்கட்டளைக்காக நேரம் ஒதுக்கி இப்பேட்டியை வழங்கியமைக்கு நன்றி. இப்பேட்டிக்கு வழிவகுத்த அவரது சகோதரர் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களுக்கு நன்றி. எஸ்.எஸ்.எம் கல்லூரியின் தலைவரான அவர், அம்மாவைப் பேட்டி காண வேண்டும் என்ற அவாவைச் சொன்ன போது உடனே அதற்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. இப்பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர், முனைவர். நா.கண்ணன் அவர்களால் காணப்படுகிறது.

இப்பேட்டியைக் கேட்க இங்கே சொடுக்குக!

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness