இசக்கி அம்மன் - விளக்கத்தை வழங்குபவர் டாக்டர்.பத்மாவதி: தமிழ் நாடு தொலியல் துறை
இரண்டு ஒலிப்பதிவுகள் உள்ளன.
அ. தமிழக கிராமப்புரங்களில் மக்களால் நம்பிக்கையுடன் வழிபடப்படும் தெய்வம் இசக்கி அம்மன். இந்த தெய்வத்தின் தன்மைகளை, எவ்வாறு இந்தத் தெய்வ வழிபாடு தமிழக மக்களின் வழிபாட்டு முறைகளில் கலந்தது என்பதை விளக்கும் ஒலிப்பதிவு முதலாவதாக இடம்பெறுகின்றது.
ஆ. அடுத்து, சமண சமயக் கதைகளைக் கூறும் ஸ்ரீபுராணத்தில் குறிப்பிடப்படும் யட்சியாம்பிகா, இசக்கி அம்மன் எனப்படும் தெய்வத்துடன் உள்ள தொடர்பினை இரண்டாவது ஒலிப்பதிவு விளக்குகின்றது.
இப்பேட்டிகளைக் கேட்கவும் இசக்கி அம்மன் கோயில் படங்களைக் காணவும் இங்கே செல்க!
இல்லத்து பிள்ளைமார் சமூகத்தினரும் நெசவுத் தொழில் தொடர்பான செய்திகளும்
தென் தமிழகத்தில் இல்லத்து பிள்ளைமார் என குறிப்பிடப்படும் குழுவினர் முன்னர் ஈழவர்கள் அல்லது நெசவு பணிக்கர்கள் என அழைக்கப்பட்டிருக்கின்றார்கள். தற்சமயம் இச்சமூகத்தினர் நெசவுத் தொழிலில் ஈடுபடுவது குறைந்து விட்டது என்ற போதிலும் முன்னர் இவர்கள் சாணார்கள் (நாடார்கள்) எனப்படும் ஒரு சமூகத்தினருக்கு நெசவுத் தொழில் பணியில் ஈடுபட்டவர்களாக இருந்ததாக வரலாற்று, தொல்லியல் ஆய்வறிஞர் திரு.எஸ். ராமச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.
அத்துடன் இக்குழுவினர் சாணார் எனப்படும் (நாடார்கள்) சமூகத்தைச் சார்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பதற்கான சான்றுகள் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆவணங்களை ஆராயும் போது கிடைக்கப்பட்ட தகவலையும் குறிப்பிடுகின்றார்.
கான் சாஹீப் ஒரு இல்லத்துப் பிள்ளையார் சமூகத்தைச் சார்ந்தவராக இருந்திருக்க வேண்டும்; கான் சாஹீப்பிற்கும் சாணார்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அவர் எங்கே பிறந்தவர் என்பது போன்ற தகவல்களைக் குறிப்பிடுகின்றார்.
இவ்வொலிப்பதிவில் இறுதியாக நாலாட்டின் புதூர் பற்றிய சிறு தகவலும் வருகின்றது.
-பேட்டி !
Subscribe to:
Posts (Atom)