இந்து உணவுப்பழக்கம்-காரண, காரியங்கள்

மதங்களும், தத்துவ தரிசனங்களும் தோன்றும் முன் கண்டதைத்தின்று உயிர் வளர்த்தான் தமிழன். ஆனால் நாகரீகத்தின் ஆரம்ப கட்டத்திலேயே உணவு பற்றிய தெளிவு தமிழனுக்கு வந்துவிட்டது. பின் சித்தர்களும், யோகிகளும் உணவுப் பழக்கத்தைச் செம்மைப்படுத்தி வழங்குகின்றனர். உலகிலேயே எங்குமில்லா அதிசயமாக இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 700 மில்லியன் மக்கள் சாத்வீக, மரக்கறி உணவுப்பழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். இது உடலுக்கு, உள்ளத்திற்கு, உலகிற்கு நல்லது என்று கண்டு சொன்னது இந்தியப்பங்களிப்பு.

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக உணவுத்துறை மாணவியின் கேள்விகளுக்கு ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் பதிலளிக்கிறார் பேராசிரியர், முனைவர் நா.கண்ணன்.

உரை கேட்க சொடுக்க!

வியட்நாமில் தமிழ்க்குரல்!

சங்காலம் தொட்டுத் தமிழன் கிழக்கும், மேற்கும் பயணித்த வண்ணமேயுள்ளான். பல்வேறு காலக்கட்டங்களில் கிழக்கே பயணப்பட்டு அங்கேயே தங்கிவிட்ட தமிழர்கள் அந்தந்த கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்டனர். அவ்வகையில் வியட்நாம் நாட்டின் சைகோன் (ஹே சி மின்) நகரில் தங்கி அங்கு இந்துக் கோயில்களை உருவாக்கிவிட்டு பின் போர்ச்சூழலில் வியட்நாமை விட்டு வெளியேறிய தமிழர்களின் பண்பாட்டு எச்சம் இன்றளவும் காணக்கிடைப்பதாக உள்ளது. சைகோன் மாரியம்மன் கோவில் பூசாரியின் மகன் ரமேஷ் எங்களுடன் உரையாடிய போது பதிவு செய்த ஒலிப்பதிவு இங்கே!

குமாரபாளையும் எஸ்.எஸ்.எம் கல்லூரி ஸ்தாபகரின் புதல்வியும், அதன் தலைவர் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களின் மூத்த சகோதரியுமான திருமதி இராஜம்மாள், உடலியல் உபாதைகளுக்குத்தோற்றக்காரணி யாது எனும் கேள்விக்கு இங்கு பதிலளிக்கிறார். எப்போதும், ஈஷ்வர பட்டரைத் தியானித்து அவர் மூலமாக பதில் சொல்லும் திருமதி இராஜம்மாள் இப்பேட்டியின் இடையிலும் திடீரென்று தொடர்பு விட்டுப்போன வானொலி ஒலிபரப்பு போல் சில நொடிகள் அப்படியே பேசுவதை நிறுத்திவிடுகிறார். பின் விட்ட இடத்திலிருந்து ஒரு வானொலி செயல்படுவது தொடர்ந்து பேசிச் செயல்படுகிறார். கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டாலும் அவரது தெள்ளிய தமிழ் நம்மை ஆச்சர்யத்தில் வைக்கிறது.

இதோ அவரது பேட்டி!

ஆன்ம வளர்ச்சியின் படிகள் - திருமதி இராஜம்மாள் பேட்டி

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியின் ஸ்தாபகரும், கல்வியாளருமான திரு.மாரியப்ப செட்டி அவர்களின் குமாரத்தியாகிய திருமதி.இராஜம்மாள் அவர்கள் உயிர்ப்பின் ஆரம்பு நிலை, வளர்ச்சி பற்றியும், ஆன்மா எங்கிருந்து தன்னை வளப்படுத்திக்கொள்கிறது, அது எப்படி அழிவற்ற நிலையான வாழ்வை எட்டமுடிகிறது எனும் பொருள் பற்றி இங்கு பேசுகிறார். பள்ளியிறுதிவரை படிக்காத இராம்மாள் அறிவியல் உண்மைகளையெல்லாம் அழகு தமிழில் சொல்லும் போது, இவர்தான் பேசுகிறாரா? இல்லை இவருள் வேறொருவர் இருந்து கொண்டு பேசுகிறாரா? என்ற கேள்வி எழும். நாம் அவரிடம் கேட்டால், உண்மையில் தன்னுள்ளிருந்து ஈஷ்வர பட்டர் எனும் மகரிஷி பேசுவதாகச் சொல்கிறார். இச்செயற்பாட்டின் மூலமாக பல்வேறு நன்னெறி நூல்களை வெளியிட்டுள்ளார் திருமதி.இராஜம்மாள். குமாரபாளையத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து பௌர்ணமியன்று வழிபாடு செய்து எல்லோரும் உய்வுறும் வண்ணம் செயல்படுகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையும், எஸ்.எஸ்.எம் கல்லூரியும் இணைந்து உருவாக்கிய தமிழ் மரபு மையம் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது அம்மாவைப் பேட்டிகாண முடிந்தது. தமிழ் மரபு அறக்கட்டளைக்காக நேரம் ஒதுக்கி இப்பேட்டியை வழங்கியமைக்கு நன்றி. இப்பேட்டிக்கு வழிவகுத்த அவரது சகோதரர் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களுக்கு நன்றி. எஸ்.எஸ்.எம் கல்லூரியின் தலைவரான அவர், அம்மாவைப் பேட்டி காண வேண்டும் என்ற அவாவைச் சொன்ன போது உடனே அதற்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. இப்பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர், முனைவர். நா.கண்ணன் அவர்களால் காணப்படுகிறது.

இப்பேட்டியைக் கேட்க இங்கே சொடுக்குக!

24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - டாக்டர்.பத்மாவதி

வணக்கம்!


மண்ணின் குரல் வெளியீட்டில் மேலும் ஒரு பதிவினையும் வெளியிடுகின்றேன்.

சிறப்புச் சொற்பொழிவுகளில் ஒன்றான டாக்டர்.பத்மாவதியின்சொற்பொழிவின் பதிவு இது.



தொல்லியல் ஆய்வுகள் - இன்று

தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட திருவிந்தளூர் செப்பேடு பற்றிய ஆய்வில் ஈடுபட்டதோடு அந்த ஆய்வேடு தயாரிப்பில் முக்கியப்பங்கு வகித்த டாக்டர்.பத்மாவதி இந்தச் செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட விதம். செப்பேடுகளில் சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தையும் மிக மிக விரிவாக எளிய தமிழில் மிகச் சுவாரசியமாக வழங்குகின்றார்.

வரலாற்று ஆய்வாளர்களுக்கும் தொல்லியல் துறை ஆர்வலர்களுக்கும் நிச்சயம் பயன்தரும் ஒரு சொற்பொழிவு இது.

ஒலிப்பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - டாக்டர்.வ.ஜெயதேவன்


மண்ணின் குரல் வெளியீட்டில் மேலும் ஒரு பதிவினையும் வெளியிடுகின்றேன்.



சிறப்புச் சொற்பொழிவுகளில் ஒன்றான டாக்டர்.வ.ஜெயதேவனின் சொற்பொழிவின் பதிவு இது.

இலக்கிய ஆய்வுகள் இன்று.


தமிழ் நாட்டு கல்விச் சூழலில் நடைபெறுகின்ற பொதுவான நிலையை விளக்குமும் ஒரு சொற்பொழிவாக  இது அமைந்துள்ளது. 



அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - டாக்டர்.ம.ராஜேந்திரன்


தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் டாக்டர்.மராஜேந்திரன் அவர்கள் உரை இந்தப் பதிவில் இடம் பெறுகின்றது. 



தமிழ்த்தேனியாரின் அறிமுகத்துடன்  தொடங்கும் இந்தச் சிற்றுரையில் அவர்:
  • தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னூல்கள், அவற்றின் பயன்
  • மரபுச் செல்வங்கள் 
  • எவையெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவை, எவற்றிற்கு முன்னுரிமை தேவைப்படுகின்றது
  • தமிழ் நூல்கள் அட்டவணை
  • தமிழ் நூல்களுக்கு த.ம.அ செய்ய வேண்டிய பணிகள்
என சில கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.


அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை]

24.2.2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு - மாலன்




திரு.மாலனின் கருத்தாக அமையும் இந்தப் பதிவில் அவர்:
  • தமிழ் நூல்கள் மின்னாக்க முயற்சிகள்
  • ஆய்வேடுகளின் தரம் குறைந்த நிலை 
  • மூன்றாம் மரபு - நாடுப்புற இலக்கியம் தொடர்பாக நாம் செய்யவேண்டிய பணிகள் 
  • அழிந்து வரும் தமிழ்ப் பாரம்பரிய வாத்தியக் கருவிகள், அவை பற்றிய தகவல் சேகரிப்பு
  • செய்யக் கூடிய வகையில் மாத சந்திப்பு அதில் பதிவுச் செய்யப்படாத விஷயங்களை ஆராய்ந்து பதிவு செய்தல்
என தன் கருத்துக்களைப் பதிகின்றார். 

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

நாட்டுப்புறவியல் ஆய்வு - 24-2-2013 த.ம.அ சந்திப்பு சொற்பொழிவு

வணக்கம்.

இம்மாத மண்ணின் குரலில் சென்னையில் 24.2.2013 அன்று நடைபெற்ற தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு நாள் நிகழ்வில் இடம்பெற்ற ஒரு சொற்பொழிவினை பகிர்ந்து கொள்கின்றேன்.

தமிழ் சூழலில் நாட்டுப்புறவியல் ஆய்வு, இந்த ஆய்வு ஏன் தேவை, ஏன் இப்பதிவுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற வகையில் இந்த சொற்பொழிவு விளக்குகின்றது.

இச்சொற்பொழிவை வழங்குபவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர்.முத்தையா அவர்கள்.




அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஆலவாய் - நரசய்யா


வணக்கம்.

திரு.நரசய்யாவின் 45 நிமிட பேட்டி ஒன்று ஒலிப்பதிவாக இன்றைய மண்ணின் குரலில் இடம்பெறுகின்றது.

Inline image 1




  • நூல் எழுத ஆரம்பித்த நாட்களில் ஐராவதம் மகாதேவனிடம் தமிழ் பிராமி எழுத்து வாசிக்க கற்றது
  • சங்கப்பாடல்களில் மதுரை
  • மதுரையில் சமணர் தடையங்கள்
  • சமணர் வாழ்வியல்
  • மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள சமணர் பள்ளிகள் - குறிப்பாக ஆனைமலை, மாங்குளம்,மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில்,  போன்ற இடங்கள்.
  • மதுரைக் கோவில், திருமலை நாயக்கர் மகால், திருவாதவூர், திருமோகூர், ஓவாமலை ஆகிய இடங்களில் கல்வெட்டுக்கள் 
  • சமணர் கழுவேற்றம் பற்றிய தகவல்கள்
  • ஜேஷ்டா தேவி
  • பிலெடெல்பியா அருங்காட்சியகத்தில் உள்ள மதுரை கோயில் மண்டபம்
  • இஸ்லாமிய படையெடுப்பில் நிகழ்ந்த கொடுமைகள்
  • வள்ளால மகாராஜாவுக்கு நிகழ்ந்த கொடுமை


இப்பேட்டியில் ஆலவாய் நூல் பற்றியும் இன்னூலை எழுத தாம் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றியும் படிப்படியாக விளக்கிச் செல்கின்றார் திரு.நரசய்யா.  


மதுரை தமிழகத்தின் முக்கிய கலாச்சார மையமாக பல நூற்றாண்டுகள் திகழ்ந்திருக்கின்றது. இந்நகரைப் பற்றி தமிழர்களாகிய நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு இந்தநூல் பெரிதும் உதவுகின்றது. 



குறிப்பு: ஆலவாய் பற்றிய மேலும் ஒரு மின் தமிழ் பதிவு இங்கே உள்ளது.

பேட்டி பதிவு: சுபா  10 ஜனவரி 2012

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் கவிதைகள்

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய இரண்டு கவிதைகள் இந்தப் பதிவில் இணைகின்றன.

1. தவம் - கவிதை

2. கணினியன் பூங்குன்றன் - கவிதை

அன்புடன்
சுபா

கண்ணன் என் சீடன்

பாரதியாரின் கண்ணன் என் சீடன்..


வாசிப்பவர் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.

கேட்க!

மாகவிஞன் திருலோகம்

கவிஞர் திருலோக சீதாராம்



  • சிவாஜி பத்திரிக்கை ஆசிரியர் - 1944 முதல் 1973 ஆகஸ்ட் வரை
  • புதுத் தமிழ்க் கவிமலர்கள்
  • கந்தர்வ கானம்  - கவிதைத் தொகுப்பு
  • இலக்கியப் படகு - கட்டுரைத் தொகுப்பு
  • சித்தார்த்தா - தமிழ் மொழி பெயர்ப்பு 
  • விஞ்ஞானி ஜி டி நாயுடு - வாழ்க்கை வரலாற்று நூல்
  • மனுதர்ம சாஸ்திரம்
என்று இலக்கியம் படைத்தவர்.

இவரைப்பற்றி ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ....

...நாமக்கல் கவிச்சோலை ஆனதும் நாழிகை வட்டில் நற்றமிழ் நரவம் ஊற்றித்தரும் குடுவையானதும் நினைவுகளில் இன்றும் தட்டாமாலையாடி வருகின்றன. அந்த மனிதர் அவ்வாறு கவிதை மயமான பாதிப்பைத் தன் சூழலில் பதிக்கக் கூடியவராக இருந்தார். இவ்வாறு சொல்லி விட்டு ஓய்ந்து விடலாம். ஆனால் அந்தப் பாதிப்பை அவர் எவ்வாறு செய்தார்? ஏனந்த பாதிப்பு மிகப்பல மற்றையோரால் செய்ய இயலவில்லை?..


குறிப்பு:மாகவிஞன் திருலோகம் என்று கணையாழியில் வெளி வந்த கட்டுரையின் ஒலி வடிவம்.

யாதவர் குலக் கண்ணன்


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் சென்று அங்கே  மலைப் பாறைகளில் கண்ட சித்திரங்களைப் பதிந்து குடைவரைக் கோயிலை பார்த்து விட்டு வரும்போது அங்கே குழுவாக வந்திருந்த யாதவர் குல மக்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. 

திருமலை பாறை சித்திரங்களையும் சமணப்படுகைகள் உள்ள இடங்களையும் அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அறிவித்து பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து விட்டு காவல் துறையினர் வருவதற்காகக் காத்திருந்த அவர்களுக்கு எங்களின் வருகை அங்கே ஆச்சரியம்.


பேசிக் கொண்டிருந்த போது வயதில் மூத்தவர் ஒருவர் -  அவர் பெயர் ஆதினமிளகி. தாங்கள் யாதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கள் குலதெய்வம் மகாவிஷ்ணு என்றும் கூறி விளக்கம் அளித்தார்.


விளக்கத்தின் போதே ஒரு குலப் பாடலையும் சொல்ல ஆரம்பிக்க அதனை வீடியோ பதிவாகவும் ஒலிப்பதிவாகவும் செய்திருந்தேன். அப்பதிவுகளை இன்று வெளியிடுகின்றேன். 


  • வீடியோ பதிவினைக் காண இங்கே செல்க: http://video-thf.blogspot.de/2013/01/blog-post.html
  • யூடியூபில் : இங்கே

ஒலிப்பதிவுகள் மண்ணின் குரலில் இங்கே:
பதிவு 1:  யாதவர் குலம்,  மகாவிஷ்ணு சார்ந்தவகையிலேயே தங்கள் பெயரிலேயே அனைவருக்கும் பெயர் வைக்கப்படுகின்றது என்பதை விளக்குகின்றார்.

பதிவு 2: கோயிலில் இருக்கும் ஒரு ஆத்தி மரம் பற்றி சொல்ல ஆரம்பித்து தங்கள் குலக்கடவுள் கண்ணனைப் பற்றி பாடுகின்றார்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness