ஆலவாய் - நரசய்யா


வணக்கம்.

திரு.நரசய்யாவின் 45 நிமிட பேட்டி ஒன்று ஒலிப்பதிவாக இன்றைய மண்ணின் குரலில் இடம்பெறுகின்றது.

Inline image 1




  • நூல் எழுத ஆரம்பித்த நாட்களில் ஐராவதம் மகாதேவனிடம் தமிழ் பிராமி எழுத்து வாசிக்க கற்றது
  • சங்கப்பாடல்களில் மதுரை
  • மதுரையில் சமணர் தடையங்கள்
  • சமணர் வாழ்வியல்
  • மதுரையைச் சுற்றியுள்ள பல இடங்களில் உள்ள சமணர் பள்ளிகள் - குறிப்பாக ஆனைமலை, மாங்குளம்,மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில்,  போன்ற இடங்கள்.
  • மதுரைக் கோவில், திருமலை நாயக்கர் மகால், திருவாதவூர், திருமோகூர், ஓவாமலை ஆகிய இடங்களில் கல்வெட்டுக்கள் 
  • சமணர் கழுவேற்றம் பற்றிய தகவல்கள்
  • ஜேஷ்டா தேவி
  • பிலெடெல்பியா அருங்காட்சியகத்தில் உள்ள மதுரை கோயில் மண்டபம்
  • இஸ்லாமிய படையெடுப்பில் நிகழ்ந்த கொடுமைகள்
  • வள்ளால மகாராஜாவுக்கு நிகழ்ந்த கொடுமை


இப்பேட்டியில் ஆலவாய் நூல் பற்றியும் இன்னூலை எழுத தாம் மேற்கொண்ட ஆய்வுகள் பற்றியும் படிப்படியாக விளக்கிச் செல்கின்றார் திரு.நரசய்யா.  


மதுரை தமிழகத்தின் முக்கிய கலாச்சார மையமாக பல நூற்றாண்டுகள் திகழ்ந்திருக்கின்றது. இந்நகரைப் பற்றி தமிழர்களாகிய நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது மிக அவசியம். அதற்கு இந்தநூல் பெரிதும் உதவுகின்றது. 



குறிப்பு: ஆலவாய் பற்றிய மேலும் ஒரு மின் தமிழ் பதிவு இங்கே உள்ளது.

பேட்டி பதிவு: சுபா  10 ஜனவரி 2012

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் கவிதைகள்

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் எழுதிய இரண்டு கவிதைகள் இந்தப் பதிவில் இணைகின்றன.

1. தவம் - கவிதை

2. கணினியன் பூங்குன்றன் - கவிதை

அன்புடன்
சுபா

கண்ணன் என் சீடன்

பாரதியாரின் கண்ணன் என் சீடன்..


வாசிப்பவர் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்.

கேட்க!

மாகவிஞன் திருலோகம்

கவிஞர் திருலோக சீதாராம்



  • சிவாஜி பத்திரிக்கை ஆசிரியர் - 1944 முதல் 1973 ஆகஸ்ட் வரை
  • புதுத் தமிழ்க் கவிமலர்கள்
  • கந்தர்வ கானம்  - கவிதைத் தொகுப்பு
  • இலக்கியப் படகு - கட்டுரைத் தொகுப்பு
  • சித்தார்த்தா - தமிழ் மொழி பெயர்ப்பு 
  • விஞ்ஞானி ஜி டி நாயுடு - வாழ்க்கை வரலாற்று நூல்
  • மனுதர்ம சாஸ்திரம்
என்று இலக்கியம் படைத்தவர்.

இவரைப்பற்றி ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ....

...நாமக்கல் கவிச்சோலை ஆனதும் நாழிகை வட்டில் நற்றமிழ் நரவம் ஊற்றித்தரும் குடுவையானதும் நினைவுகளில் இன்றும் தட்டாமாலையாடி வருகின்றன. அந்த மனிதர் அவ்வாறு கவிதை மயமான பாதிப்பைத் தன் சூழலில் பதிக்கக் கூடியவராக இருந்தார். இவ்வாறு சொல்லி விட்டு ஓய்ந்து விடலாம். ஆனால் அந்தப் பாதிப்பை அவர் எவ்வாறு செய்தார்? ஏனந்த பாதிப்பு மிகப்பல மற்றையோரால் செய்ய இயலவில்லை?..


குறிப்பு:மாகவிஞன் திருலோகம் என்று கணையாழியில் வெளி வந்த கட்டுரையின் ஒலி வடிவம்.

யாதவர் குலக் கண்ணன்


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் சென்று அங்கே  மலைப் பாறைகளில் கண்ட சித்திரங்களைப் பதிந்து குடைவரைக் கோயிலை பார்த்து விட்டு வரும்போது அங்கே குழுவாக வந்திருந்த யாதவர் குல மக்களைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு அமைந்தது. 

திருமலை பாறை சித்திரங்களையும் சமணப்படுகைகள் உள்ள இடங்களையும் அரசு பாதுகாக்கப்பட வேண்டிய புராதனச் சின்னமாக அறிவித்து பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என்று கூறி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்து விட்டு காவல் துறையினர் வருவதற்காகக் காத்திருந்த அவர்களுக்கு எங்களின் வருகை அங்கே ஆச்சரியம்.


பேசிக் கொண்டிருந்த போது வயதில் மூத்தவர் ஒருவர் -  அவர் பெயர் ஆதினமிளகி. தாங்கள் யாதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தங்கள் குலதெய்வம் மகாவிஷ்ணு என்றும் கூறி விளக்கம் அளித்தார்.


விளக்கத்தின் போதே ஒரு குலப் பாடலையும் சொல்ல ஆரம்பிக்க அதனை வீடியோ பதிவாகவும் ஒலிப்பதிவாகவும் செய்திருந்தேன். அப்பதிவுகளை இன்று வெளியிடுகின்றேன். 


  • வீடியோ பதிவினைக் காண இங்கே செல்க: http://video-thf.blogspot.de/2013/01/blog-post.html
  • யூடியூபில் : இங்கே

ஒலிப்பதிவுகள் மண்ணின் குரலில் இங்கே:
பதிவு 1:  யாதவர் குலம்,  மகாவிஷ்ணு சார்ந்தவகையிலேயே தங்கள் பெயரிலேயே அனைவருக்கும் பெயர் வைக்கப்படுகின்றது என்பதை விளக்குகின்றார்.

பதிவு 2: கோயிலில் இருக்கும் ஒரு ஆத்தி மரம் பற்றி சொல்ல ஆரம்பித்து தங்கள் குலக்கடவுள் கண்ணனைப் பற்றி பாடுகின்றார்.

அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness