தமிழ் மரபு அறக்கட்டளை - SBS வானொலி பேட்டி

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் SBS வானொலியில் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய  பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. இப்பேட்டியை இங்கே கேட்கலாம். 


 பேட்டியைக் கேட்க

http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/everyone-has-idea-only-few-act-it





வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 4

வணக்கம்.

நெல்லை வட்டார வழக்கு இனிமையானது அதில் உள்ள சிறப்பான மேலும் சில சொற்களை நமக்காக வழங்குகின்றார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் திரு.ஆமோஸ் நவீன் இளையராஜா.



பதிவினைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​

வட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்

வணக்கம்.

ஒப்பாரிப் பாடல்கள் வழி  வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை.  பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம்.



இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான மெட்ராஸ் பட்டிணத்தின் வட சென்னையில் வாழும் மக்களிடையே நிலவும் வாய் மொழிப் பதிவு இது. மரண நிகழ்வில் பாடப்படும் பட்டினத்தார் பாடல்கள் இதில் முக்கியத்துவம் பெருகின்றன.

பூதவுடலை எடுக்கும்போதும், இடுகாட்டிற்குக் கொண்டு போகும் வழியிலும், இடுகாட்டின் நுழை வாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோயிலின் முன்னேயும், பின்பு பிணத்தைப் புதைக்கும்போதும் ஏராளமான பாடல்கள் பாடப்படுகின்றன. அந்தப் பாடல்கள் பெரும்பாலும் பட்டினத்தார் பாடல்களாக இருக்கின்றன. அந்த பாடல்களின் சிறப்பு அவற்றைக் கேட்கும் போது புலப்படும். அந்தப் பாடல்களை அவர்கள் ஒப்பாரிப் பாடல்களாவும் சடங்குப் பாடல்களாவும் கருதுகின்றனர்.



குறிப்பு.  இந்த ஒலிப்பதிவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்கு நமது நன்றி.

பாடல் பதிவு 1
பாடல் பதிவு 2






அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​

வட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 3

வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் பாடப்படும் சில பாடல்களைப் பற்றி விவரிக்கின்றார்.

கிராமிய பாடல்கள் என்றாலே எளிமையும் அழகும் நிறைந்திருக்கும் தானே. சின்னச் சின்னப் பாடல்கள் தாம் என்றாலும் இவையும் மறக்கப்படும் சூழல் உருவாகிக்கொண்டிருப்பதைத் தானே காண்கின்றோம்!

பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​

வர்ண ஆடை குழலூதி

வட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 2




இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் உள்ள பண்டிகைகள் பற்றியும் அப்பண்டிகைகளின் போது செய்யப்படும் உணவு பதார்த்தங்கள் பற்றியும் சொல்கின்றார்.

பொதுவான பேச்சு வழக்கில் கேட்டிராத பல சொற்கள் இதில் சர்வ சாதாரணமாக புழக்கத்தில் இருப்பதை இப்பதிவைக் கேட்கும் போது உணரலாம்.

பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

வட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 1



காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், இப்படி நகரத்தார் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் நகரத்தார் வட்டார வழக்கினை மக்கள் பேசும் போது கேட்டிருப்போம். இன்றோ நகரத்தார்கள் மலேசியா, சிங்கை, பர்மா என்று மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பா என பல நாடுகளிலும் வசிக்கின்றார்கள். நகரத்தார் பேச்சு வழக்கு இங்கேயும் அவ்வப்போது கேட்கத்தான் முடிகின்றது.

வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் திருமதி.விசாலாட்சி வேலு தமிழகத்தின்  அரிமளத்தில் பிறந்து வளர்ந்தவர்.  இன்றும் மிக இயல்பாக நகரத்தார் தமிழில் உரையாடும் திறனோடு இருக்கின்றார்.

அவர் நகரத்தார் பேச்சு வழக்கிலேயே செட்டி நாட்டு மக்களிடையே உறவு முறைகளை எப்படி பெயரிட்டு அழைப்பர் என்பதனை விளக்குகின்றார்.

பதிவினைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​

21.1.2017 - கோலாலம்பூரில் நடைபெற்ற த.ம.அ கருத்தரங்கம்


2017ம் ஆண்டின் முதல் நிகழ்வாக "பண்பாட்டு மீட்சிக்கான தேடல் - பன்னாட்டுப் பார்வையில்" என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தோம். தமிழர் பண்பாட்டில் இறையியல் கூறுகளை மையப்படுத்தி இந்த ஒரு நாள் கருத்தரங்கு திட்டமிடப்பட்டிருந்தது. இளம் தலைமுறையினர் அதிகமாகக் கலந்து கொள்ளும் வகையில் பல்கலைக்கழகத்திலும் கல்லூரிகளிலும் இந்த நிகழ்ச்சி தொடர்பாக செய்திகள் பரிமாறப்பட்டதால் அதிகமான இளைஞர்கள் இந்தக் கருத்தரங்கில் வந்து கலந்து கொள்ள வாய்ப்பு அமைந்தது.

இக்கருத்தரங்கில் நான்கு வெவ்வேறு தலைப்புக்களில் சொற்பொழிவாளர்களது உரைகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.



முதல் சொற்பொழிவு தமிழ் பௌத்தம் பற்றியது. தமிழகத்திலிருந்து வருகை செய்திருந்த எழுத்தாளர்.திரு.கௌதம சன்னா அவர்கள் இந்தச் சொற்பொழிவை வழங்கினார். தமது உரையில் புத்தரின் வரலாறு தொடர்பான செய்திகளிலிருந்து தொடங்கி, அவர் அரண்மனையிலிருந்து வெளியேறியமைக்கான, வழக்கில் இருக்கும் கதைக்கு முற்றிலும் மாறுபாடான ஒரு கருத்தினை முன் வைத்து புதிய தகவல்களை வழங்கினார். புத்தரின் கொள்கைகள், அவரது துறவு அது தொடர்பான தேடல்கள், புத்தமத பிரிவுகள், தமிழில் உள்ள புத்த இலக்கியங்கள், பாலி மொழி தொடர்பான தகவல்கள் மட்டுமன்றி இன்று தமிழர் வாழ்வியலில் வழக்கில் இருக்கும் சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாட்டு முறைகளில் கலந்திருக்கும் பௌத்தத்தின் தாக்கம் பற்றியும் அவரது சொற்பொழிவு அமைந்திருந்தது. முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருந்த இச்சொற்பொழிவு, வந்திருந்த பார்வையாளர் மத்தியில் குறிப்பிடத்தக்க கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மண்ணில் மட்டுமன்றி மலேசிய சூழலிலும் பௌத்தத்தின் தாக்கம் பற்றி விரிவான ஆய்வுகள் நிச்சயம் தேவை என்பதை உறுதி செய்வதாக அமைந்திருந்தது.

உரையைக் கேட்க!




இதனைத் தொடர்ந்து எனது சொற்பொழிவு இடம்பெற்றது. தமிழர் வழிபாட்டில் மிக முக்கிய பங்கு வகிக்கும் குல தெய்வ வழிபாடு பற்றியும் நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றியும் இந்த உரையில் தகவல்கள் வழங்கினேன். தமிழகத்துக்கான எனது களப்பணிகளுக்கான பயணங்களில் நான் சேகரித்த நாட்டார் வழிபாட்டில் இடம்பெறும் தெய்வங்கள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய விபரங்களை வழங்கினேன். இதில் சாமிகள் பற்றிய பின்னணியில் இருக்கும் கதைகள், செவி வழிச்செய்திகள், சடங்குகள், வழிபாட்டு முறைகள் என்பன பற்றிய செய்திகளையும் வழங்கினேன். தமிழகத்திலிருந்து அன்றைய மலாயாவிற்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்கள் குலதெய்வ வழிபாடுகளை தாங்கள் புலம்பெயர்ந்த மலாயாவிலும் ஏற்படுத்தி, இன்று அக்கோயில்கள் பெரிய அளவில் மக்களால் வழிபடப்படும் நிலை இருப்பதையும் எனது சொற்பொழிவில் பகிர்ந்து கொண்டேன்.

உரையைக் கேட்க!




மதிய அமர்வில் முதல் பேச்சாளராக பேரா.நா.கண்ணன் தனது கட்டுரையை வழங்கினார். பன்முகத்தன்மையில் எவ்வாறு சங்க இலக்கியம் தொடங்கி தமிழர் வாழ்வில் வழிபாட்டுக் கூறுகள் அமைந்தன என்பதை சுட்டிக் காட்டுவதாக அவரது சொற்பொழிவு அமைந்தது. பக்தி நிலை பற்றி விரிவாகத் தனது சொற்பொழிவில் விளக்கம் அளித்தார். அத்தோடு வைஷ்ணவ பாரம்பரியத்தில் பக்தி நிலை பற்றி குறிப்பிட்டு ஸ்ரீ ராமானுசரின் சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களையும் முன் வைத்து தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

உரையைக் கேட்க!






இந்தக் கருத்தரங்கில் இறுதி சொற்பொழிவாக அமைந்தது திரு.ஒரிசா பாலு அவர்களின் வள்ளலார் பற்றிய ஆய்வுரை. வள்ளலாரின் சன்மார்க்க கருத்துக்களை எளியத் தமிழில் வந்திருந்தோர் புரிந்து கொள்ளும் வகையில் தெளிவாக தனது உரையில் விளக்கமளித்தார். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலாரைப் போலவே தற்சமயம் தமது பயிர்கள் காய்ந்து கருகி மடிவதைக் கண்டு மனம் தாளாது மடிந்த தமிழக விவசாயிகளைத் தனது உரையில் நினைவு கூர்ந்தார். வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைகளை விட ஆறாம் திருமுறையை வாசிப்பதிலும் அதனைப் புரிந்து கொள்வதிலும் நாம் ஆர்வம் காட்ட வேண்டும் என்ற தன் கருத்தை முன் வைத்ததோடு வள்ளலாரை இறைவனாகப் பார்க்காமல் நல்ல சக மனிதராக, வழிகாட்டியாகப் பார்த்தால் அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்ளலாம் என்ற அருமையான கருத்தையும் முன் வைத்தார்.

உரையைக் கேட்க!

குறிப்பு: ஒலிப்பதிவுகளைச் செய்து வழங்கிய மலர்விழி பாஸ்கரனுக்கு நம் நன்றி

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 3


நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் நெல்லைத் தமிழ்ச்சொற்களுக்கான விளக்கம் அளிக்கின்றார்.  பதிவின் மூன்றாம் பகுதி இன்று வெளியிடப்படுகின்றது.

​பதிவினைக் கேட்க செல்க !

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness