இடையன்வயல் கோபாலமடத்துச் செப்பேடு



ரகுநாத கிழவன் சேதுபதியின் மனைவி காதலி நாச்சியார் என்பவருடைய செப்பேடு இது. கி.பி.1709ல் எழுதப்பட்டது. இராமநாதபுரம் அருகே செயினர்பள்ளி எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருப்பது இடையன்வயல் கோபாலமடம்  ஆகும்.  இராமேச்சுரம் செல்லும் பாதயாத்திரிகர் இங்கே தங்கிச் செல்வதற்காகவும், யாத்திரிகர்களுக்கு நீர்மோர் வழங்குவதற்கும் இந்த மடத்தை இராமநாதபுரம் மன்னர் கிழவன் ரெகுநாத சேதுபதி அவர்கள் இடையன்வயல் அம்பலம் அவர்களுக்குத் தானமாக வழங்கியுள்ளார்.  இதற்கானச் செப்புப் பட்டயம்​ தான் இது.

இதில் என்ன செய்தி இருக்கின்றது எனத் தெரியாமல் யாரோ மந்திரத்தை எழுதி வைத்திருக்கின்றார்கள் என இவர்கள் மாமியார் பழைய வியாபாரிகள் சங்கத்தில் தூக்கிப் போட போன போது ​இதில் ஏதேனும் முக்கியச் செய்தி இருக்கும் ​பத்திரப்படுத்தலாம் என எடுத்து வைத்​திருக்கின்றார். ​இவரது மாமியாரோ இ​து ஏதோ சொத்து விபரங்களைச் சொல்கின்றதோ என சந்தேகத்தில் ​இவருக்கு ​வாசிக்கவும் தரவில்லையாம். ​​மாமியாரிடமிருந்து இதனை பெற்று வாசிப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகளை இவர் விவரிப்பது கேட்பவர்களுக்கு ஒரு சுவாரசியமான கதையாக இருக்கும்.  ​

​எப்படி தனது குடும்பத்திலேயே தடைகளைத் தாண்டி இந்தச் செப்பேட்டை வாசித்து முடித்தார். ஒரு வருட காலம் இந்தச் செப்பேட்டை வாசிக்க  அவர் செய்த முயற்சிகள், ஏற்பட்ட தடைகள், ​கிழவன் ​சேதுபதி இறந்த போது அவரது மனைவியர் 47 பேரும் அவரது இறந்த உடலைச் சுற்றி வந்து நெருப்பில் விழுந்து உடன்கட்டை ஏறியிருக்கின்றனர். அவர்களில் ஒரு மனைவி சாக விருப்பம் இல்லாமல் தப்பிக்க முயன்றும் அவரையும் காவலாளிகள் நெருப்பில்  தூக்கிப் போட்டிருக்கின்றனர். இப்படி பல சுவாரசியமான செய்திகளை இந்தப் பேட்டியில் சொல்கிறார். ​

​இந்தப் பதிவில் சொல்லப்படுவது போல நம்மில் பலரது வீடுகளில் உள்ள பழைய இரும்புப் பெட்டிகளிலும் குடும்ப பாரம்பரிய பைகளிலும் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம். எல்லாமே சொத்து விபரங்கள் தான் என நினைத்து யாருக்கும் காட்டாமல் வைத்திருப்பதை விட்டு ​பெச்சேடுகள் வாசிப்போரை அணுகி அறிந்தால் அவற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளை நாம் அறிந்து கொள்ளலாம் அல்லவா.

ஒலிப்பதிவை கேட்க - இங்கே அழுத்தவும்

அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18

தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18

கொங்கு தமிழ் - 3. வண்டி



பழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.

கதையைக் கேட்க இங்கே அழுத்தவும்.

கொங்கு தமிழ் - 2. பவளமணி



பழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.

கதையைக் கேட்க இங்கே அழுத்தவும்

கொங்கு தமிழ் - பகட்டுக்கு இரவல்



பழமை பேசி வழங்கும் கொங்கு தமிழ் வழக்கில் அமைந்த ஒரு நாட்டுப்புறக்கதை.

கதையைக் கேட்க இங்கே அழுத்தவும்.


வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போமா (6)

வெற்றிக்கனியை எட்டிப்பறிபோமா? (5)

வெற்றிக்கனியை எட்டிப்பறிபோமா? (5)

வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா? (3)

வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா? (3)

அடடா .. டென்சன் பார்ட்டியா நீங்கள்?

30 நொடிகளில் வெற்றி !

வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா? (1)

வெற்றிக்கனியை எட்டிப்பறிப்போமா?(2)

தமிழ் மரபு அறக்கட்டளை - SBS வானொலி பேட்டி

ஆஸ்திரேலியாவிலிருந்து ஒலிபரப்பாகும் SBS வானொலியில் தமிழ் மரபு அறக்கட்டளை பற்றிய  பேட்டி வெளியிடப்பட்டுள்ளது. இப்பேட்டியை இங்கே கேட்கலாம். 


 பேட்டியைக் கேட்க

http://www.sbs.com.au/yourlanguage/tamil/en/content/everyone-has-idea-only-few-act-it





வட்டார வழக்கு: திருநெல்வேலி பேச்சு வழக்கு - பகுதி 4

வணக்கம்.

நெல்லை வட்டார வழக்கு இனிமையானது அதில் உள்ள சிறப்பான மேலும் சில சொற்களை நமக்காக வழங்குகின்றார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் திரு.ஆமோஸ் நவீன் இளையராஜா.



பதிவினைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​

வட்டார வழக்கு - ஒப்பாரிப் பாடல்கள் -ஆண் பாடகர்

வணக்கம்.

ஒப்பாரிப் பாடல்கள் வழி  வழியாய் தமிழர் பாரம்பரியத்தில் வருகின்ற ஒரு கலை.  பொதுவாக இறந்தோர் இல்லங்களில் வயதான பெண்கள் ஒப்பாரிப் பாடல்களைப் பாடுவர். ஆனால் வித்தியாசமாக ஆண் ஒருவர் ஒப்பாரிப் பாடலை பாடுவதை இப்பதிவில் கேட்கலாம்.



இந்தியாவின் மிகப் பழைமையான மாநகராட்சியான மெட்ராஸ் பட்டிணத்தின் வட சென்னையில் வாழும் மக்களிடையே நிலவும் வாய் மொழிப் பதிவு இது. மரண நிகழ்வில் பாடப்படும் பட்டினத்தார் பாடல்கள் இதில் முக்கியத்துவம் பெருகின்றன.

பூதவுடலை எடுக்கும்போதும், இடுகாட்டிற்குக் கொண்டு போகும் வழியிலும், இடுகாட்டின் நுழை வாயிலில் உள்ள அரிச்சந்திரன் கோயிலின் முன்னேயும், பின்பு பிணத்தைப் புதைக்கும்போதும் ஏராளமான பாடல்கள் பாடப்படுகின்றன. அந்தப் பாடல்கள் பெரும்பாலும் பட்டினத்தார் பாடல்களாக இருக்கின்றன. அந்த பாடல்களின் சிறப்பு அவற்றைக் கேட்கும் போது புலப்படும். அந்தப் பாடல்களை அவர்கள் ஒப்பாரிப் பாடல்களாவும் சடங்குப் பாடல்களாவும் கருதுகின்றனர்.



குறிப்பு.  இந்த ஒலிப்பதிவுகளையும் புகைப்படங்களையும் நமக்கு வழங்கிய திரு.கௌதம சன்னா அவர்களுக்கு நமது நன்றி.

பாடல் பதிவு 1
பாடல் பதிவு 2






அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​

வட்டார வழக்கு: நகரத்தார் பேச்சு வழக்கு - பகுதி 3

வணக்கம்.

இந்தப் பதிவில் திருமதி.விசாலாட்சி வேலு, நகரத்தார் வழக்கில் பாடப்படும் சில பாடல்களைப் பற்றி விவரிக்கின்றார்.

கிராமிய பாடல்கள் என்றாலே எளிமையும் அழகும் நிறைந்திருக்கும் தானே. சின்னச் சின்னப் பாடல்கள் தாம் என்றாலும் இவையும் மறக்கப்படும் சூழல் உருவாகிக்கொண்டிருப்பதைத் தானே காண்கின்றோம்!

பதிவைக் கேட்க!


அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​​​​

வர்ண ஆடை குழலூதி

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness