உழவுத் தொழில் - 1



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் முதல் பாகம்.


பாகம் 1 - உழவர்களின் வாழ்க்கை முறை, வயலில் உழவு, நார்த்தங்காலை தயார்படுத்தும் முறை

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 13



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 13 - ஜெர்மனிக்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் தொழில் நிலை, சுய தொழில் ஈடுபாடு, தொழில் சார்ந்த சட்ட திட்டங்கள்.

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 3

திரு.நரசய்யா

மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.

பாகம் 3 - இங்கிலீஷ்காரர்கள் மதராஸ் வந்த விதம் - 2,மதராசில் போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், மற்றும் இங்கிலீஷ்காரர்கள்;
மசூலிப் பட்டினத்தினத்திலிருந்து ஆந்திராக்காரர்கள் மதராசிற்கு கொண்டு வரப்பட்ட வரலாறு;
மதராசிற்கு வந்த முக்கிய நபர்கள்.

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - II

முனைவர்.கி.லோகநாதன்

முனைவர் கி.லோகநாதன் அவர்கள் மலேசியா பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தில் உளவியல் பேராசிரியராக பணி புரிந்தவர். இவர் நியூ ஸிலாந்தில் கணிதத் துறையில், பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்று சில ஆண்டுகள் மலேசிய கல்வி அமைச்சில் பணி புரிந்தவர். சைவ சித்தாந்ததில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர் இவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல் வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை மலேசியாவில் நிகழ்த்தி வருகின்றார். இவரது சைவ சித்தாந்த உரைகளை இப்பகுதியில் கேட்டு மகிழலாம்.



[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

திரு.வி.க - III

திரு.சௌந்தரராஜன் (இன்னம்பூரான்)

தமிழறிஞர், தொழிற்சங்கவாதி, முற்போக்கு சிந்தனையாளர் திரு.வி.கலியாண சுந்தரம் பற்றிய சிந்தனைப் பகிர்வு.
Mr.S.Soundararajan (Innamburan) took his Masters in Economics in 1954 (Madras), in Applied Sociology (Advice Studies´) in 2006 (Staffordshire University UK) and is currently a student in B.Litt (Tamil). He retired as the Additional Deputy Comptroller & Auditor General of India in 1991 and was into Consultancy and lecture tours for some time. He writes occessionaly in the Hindu and Frontline. He spent five years as a Citizen Adviser in the UK, as a volunteer.
பாகம் 3 - தேச பக்தனில் ஏற்பட்ட தொடர்பு, சந்தித்த பிரச்சனைகள்

[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness