பொங்கல் நினைவுகள்!


பொங்கல் நினைவுகள்

பொங்கல் எனும் போது கன்னல் கரும்பும், இளங்கன்று விளையாட்டும் நினைவிற்கு வருவதாக இங்கு நனவிடைகூருகிறார் நா.கண்ணன். அதே நேரத்தில் புகலிட வாழ்வில் மறைந்து போன தமிழ் வாழ்வு குறித்தும் பேசுகிறார்.

நல்லதோர் வீணை செய்தே!



பொங்கல் தினச் செய்தி

சுபாஷினி கனகசுந்தரம்

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவ சக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்...

வல்லமை தாராயோ - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே

சொல்லடி சிவ சக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திட புரிகுவையோ? -
சுப்ரமணிய பாரதி

பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை


பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.

தமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் சுபாஷினி கனகசுந்தரம்.

பாகம் 2

தமிழ்த்தேனீ கவிதைகள்


தமிழ்த்தேனீ

தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்

1.பொதுக்கவி

2.பொங்கல் - பொங்கல் தின சிறப்பு கவிதை

கிராமப்புற சமையல் வகைகள்

தமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

தமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது.நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.

பாகம் 4 - முடக்கத்தான் ரசம்

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 3


திரு.குமரன்

ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.

பாகம் 3 - ஈழத்தமிழர்களின் ஆரம்ப கால புலம் பெயர்வு

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness