10 - 05 - 09 அன்று மயிலாப்பூர் 'ஸ்ரீனிவாசசாஸ்திரி ஹால்' ல் நடைபெற்ற யுகமாயினி இலக்கியக் கூடல் பதிவுகள் இவை. இந்தப் பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அனுப்பியவர் யுகமாயினி சித்தன்.
இப்பகுதியில் இடம்பெறுபவை:
1. யுகமாயினி சித்தன் வழங்கும் அறிமுக உரை.
இலக்கிய கூட்டங்கள் தனித்தனியாக சிறிது சிறிதாக நடைபெற்று வருவதும், பல இலக்கிய கூடங்கள் இலக்கிய ஆர்வலர்களுக்குத் தேவையான விஷயங்களைத் தருவதில்லை என்ற தனது ஆதங்கத்தை விளக்கி அதனைப் போக்க தரமிக்க ஒரு இலக்கிய கூட்டத்தை மாதா மாதம் நடந்த வேண்டியதன் அவசியத்தை விவரிக்கிறார். அதோடு இக்கூட்டம் நடை பெறும் தன்மையினையும் விளக்குகின்றார். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!
2. கவிஞர் ரவி சுப்ரமணியன் புதுக்கவிதையும் இசையும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை). ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!
3. வெங்கட் தாயுமானவன் - 'ஜீவனென் கவிதை' என்ற தலைப்பில் மிக ஆர்வமாகத் தனது பணிகள் பற்றியும் மின்தமிழ் வழி தான் அறிமுகம் பெற்ற நண்பர்கள் பற்றியும் விவரிக்கின்றார். (குறிப்பு: ஆரம்பப்பகுதி பதிவில் இல்லை)ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!
4. ஆய்வாளர் "இன்று" திரு.சுவாமிநாதன் - தமிழில் 'அடிமையின் மீட்சி' ம.ந.ராமசாமி அவர்களது நூல் பற்றிய ஆய்வுரை வழங்குகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை) கேட்க இங்கே சுட்டுக!
பதிவுகளில் சில பகுதிகள் விடுபட்டிருந்தாலும் உரையின் பெரும்பாலான பகுதிகள் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த பேச்சுக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment