சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு வாய்ந்த ஒரு எழில் நகரம் தேவகோட்டை. வரலாற்றை கேட்டு அறிந்து கொள்ளும் போது பாஸ்கர சேதுபதி அவர்கள் ராஜாவாக பதவி பெறுவதைத் தடுக்க பங்காளிகள் முயற்சித்த போது நடந்த குழப்பத்தில் பாஸ்கர சேதுபதிக்கு உதவிய ஏ.எல்.ராமசாமி செட்டியார் அவர்களை தான் ராஜாவாக பொறுப்பேற்ற பின்னர் கௌரவித்து அவருக்கு ஏராளமான நிலங்களை வழங்கி தேவகோட்டை பகுதிக்கு அவரை ஜமீந்தாராக நியமனமும் செய்திருக்கின்றார்.
இவர் ஜமீந்தாராக ஆகிய பின்னர் செய்த ஆலாயத் திருப்பணிகள் பல. காளையார் கோயில் திருப்பணி, ராமேஸ்வர சத்திரம் மற்றும் கோயில் திருப்பணி, காளகஸ்தி கோயில் திருப்பணி, சாலை புதுப்பித்தல் எனப் பல சமூகப் பணிகளைச் செய்ததை நாம் மறக்க முடியாது.
தமிழ் மரபு அறக்கட்டளையினர் ஜனவரி 2012 காரைக்குடி பகுதிக்குச் சென்ற போது இன்றைய தேவகோட்டை ஜமீன் வாரிசான திரு.ராமகிருஷ்ணன் அவர்களை சந்தித்து உரையாடும் வாய்ப்பு பெற்றோம்.
திரு.ராமகிருஷ்ணன்
டாக்டர்.வள்ளி
நன்றி: இந்த பேட்டிக்கான ஏற்பாட்டினைச் செய்த விசாகப்பட்டினம் திரு.திவாகருக்கு த.ம.அ வின் நன்றி.
படங்கள், ஒலிப்பதிவு, வீடியோ பதிவு: சுபா
அன்புடன்
சுபா
(தமிழ் மரபு அறக்கட்டளை)
0 comments:
Post a Comment