நெல்லைச் சீமையின் வட்டார வழக்கு தமிழகத்தின் ஏனைய பிற பகுதிகளிலிருந்து வேறுபடுவது.
பல சொற்களை உள்ளூர் வாசிகளே கூட மறந்து விடும் நிலை இப்போது ஏற்பட்டிருக்கும் வேளையில் இந்த நிலத்திற்கே உரிய சிறப்பாம் இச்சொற்களை நாம் பதிந்து வைத்து அவற்றை கேட்டு மகிழ்வதும் சுவாரசியம் தானே?
அதிலும் நெல்லை சீமையிலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்து வரும் அண்ணாச்சி இரா.நாறும்பூநாதன் அவர்கள் குரலில் சுவைபட பேசுகின்றார். 10 நிமிட பதிவு முதல் பகுதியாக இன்று வெளியிடப்படுகின்றது.
நெல்லைத் தமிழ் கேட்க இங்கே அழுத்தவும்!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
4 comments:
நெல்லை வட்டார வழக்கி்லுள்ள பல சொற்களின் அருமை அங்கேயே வசிக்கும் போது தெரியாது.
ஆயிரம் மைல்கள் தாண்டி வசிக்கும் போது அசைபோட சுவையானது. பேச்சு வழக்கில் மிகவும் மருவிப்போன சொற்களின் மூலம் தூயவடிவமாக இருக்கும்.
"பைய" என்ற வார்த்தைக்கு "மெல்ல" அல்லது "மெள்ள"என்ற பொருள்.
"ஏலே"என்றால் "அடேய்"."எல்லே இளங்கிளியே இன்னமும் நீ
உறங்குதியோ" ஆண்டாள் பாடல்.எல்லே ஏலே ஆகிவிட்டது. (Term of endearment.) சமகால வழக்கில் ஆண்பால்.ஆண்டாள் பயன்படுத்தியது பெண்பாலுக்கு.(தோழி)
ஏட்டி=ஏண்டி,ஏனடி,என்னடி (பெண்பால்)
ஓட்டம் கிண்ணி விட்டான் = விரைவாக ஓடிவிட்டான்.
ஆவலாதி= புகார்
தவசுப்பிள்ளை= சமையல்காரர்
நீர்மாலை=இறுதிச்சடங்கில் நீர்ச்செம்பு எடுத்துச்செல்லுதல்.
வெறுவாக்கெட்ட மூதி(வசைச்சொல்)
= வெறும் வாக்கினால் கெட்ட மூதேவி (அதிகப் பிரசங்கி;தவளை தன் வாயால் கெடும்.) மூதி இருபாலருக்கும் பொதுவானது. அன்புமிகுதியால் அழைப்பதுவும் அடங்கும்.
அங்கணக்குழி ,அங்கணாக்குழி =குளியலறைப் பள்ளம்.
தார்ஸா= வரவேற்பறை குமரகுருபரர் தார்ஸா என்று பயன்படுத்தியுள்ளார்.பெர்ஸிய மூலம்.
பட்டகசாலை= பட்டாலை(மரூஉ) வீட்டின் இரண்டாம் கட்டு அறை.
மானவெளி= வான்வெளியின் திரிபு.முன்வாசலையும் பின்வாசலையும் இணைக்கும் வானம் நோக்கித் திறந்த வெளி.காற்றோட்டமான வெளி.
பொறவாச(ல்)=புறவாசல் என்பதன் திரிபு.தோட்டம் உள்ள பகுதி.
அடுக்களை=சமையல் அறை.
....
ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிந்து திருநெல்வேலி, தூத்துக்குடி ஆனது.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுவாக இசைபோன்றே இழுத்துப் பேசுவர்.தூத்துக்குடி, கோவில்பட்டி கரிசல் பகுதியில் "வந்திருக்காஹ"
என்றால் வந்திருக்கிறார்கள் என்பதன் பேச்சுவழக்கு. "எப்ப வந்தீய?" எப்போது வந்தீர்கள்? என்பதன் நெல்லை வழக்கு
குறிப்பிட்ட சாரார் அதிகம் புழங்குவர்.
இதில் மாறுபாடுகளும் உண்டு.
நாறும்பூநாதன் முதல் பகுதியில் சுவையான வழக்காறுகளை நெல்லை மணம் கமழப் பதிவு செய்திருக்கிறார். தொடரட்டும் இப்பணி.
-இரா.குமரகுருபரன், சென்னை
மின்னஞ்சல்: kgp.vinci@gmail.com
நல்லாருக்குவே
Good activity
மணத்துதல் என்ற வார்த்தை
முத்தம் என்ற வார்த்தைக்கு பதிலாக
பயன் படுத்தும் வார்த்தை.
Post a Comment