காரைக்குடி, தேவகோட்டை, கானாடுகாத்தான், இப்படி நகரத்தார் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் நகரத்தார் வட்டார வழக்கினை மக்கள் பேசும் போது கேட்டிருப்போம். இன்றோ நகரத்தார்கள் மலேசியா, சிங்கை, பர்மா என்று மட்டுமல்லாமல் அமெரிக்கா ஐரோப்பா என பல நாடுகளிலும் வசிக்கின்றார்கள். நகரத்தார் பேச்சு வழக்கு இங்கேயும் அவ்வப்போது கேட்கத்தான் முடிகின்றது.
வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் வசிக்கும் திருமதி.விசாலாட்சி வேலு தமிழகத்தின் அரிமளத்தில் பிறந்து வளர்ந்தவர். இன்றும் மிக இயல்பாக நகரத்தார் தமிழில் உரையாடும் திறனோடு இருக்கின்றார்.
அவர் நகரத்தார் பேச்சு வழக்கிலேயே செட்டி நாட்டு மக்களிடையே உறவு முறைகளை எப்படி பெயரிட்டு அழைப்பர் என்பதனை விளக்குகின்றார்.
பதிவினைக் கேட்க!
அன்புடன்
முனைவர்.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
0 comments:
Post a Comment