முனைவர்.மோஸஸ்
தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அல்லது நல்லை கவிராயர், சுவிஷேடக் கவிராயர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் தமிழறிஞர் முனைவர்.மோசஸ். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் நூல்களில் பல பெரும்பாலும் செய்யுள் வடிவம் கொண்டவை. -பெரும்பாலும் ஏசு பெருமானைப் பற்றிய பாடல்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டவை. 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். இதில் ஏறக்குறைய 10 நூல்களே இன்று நூல் வடிவில் கிடைக்கின்றன. பல நூல்கள் கையெழுத்துப் படிகளாக உள்ளன; இன்னமும் அச்சு வடிவம் பெற வில்லை. இவரது நூல்களான பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், ஞான தச்சன் நாடகம் போன்றவை அச்சு வடிவில் வந்து புகழ்பெற்ற நூல்கள். இவரது நூல்கள் மின்பதிப்பாக்கம் பெற வேண்டும் முனைவர்.மோஸஸ் இந்த பதிவில் விண்ணப்பிக்கின்றார்.
பதிவைக் கேட்க..
1 comments:
Post a Comment