சைவமும் தமிழும் வளர்க்கும் பணியோடு கல்விப்பணி, சமூகப்பணி, கிராமப்புற மேம்பாட்டுப் பணி, என்பதோடு கிராம மக்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சிகளையும் செய்து வருகின்றது குன்றக்குடி சைவத் திருமடம். அத்துடன் மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் என்ற இரண்டு தமிழ் மாத இதழ்களையும் வெளியிட்டு வருகின்றது. மக்கள் சிந்தனை, சமய நல்லினக்கம், அறிவியல் கல்விச் செய்திகள் போன்றவற்றையும் இவ்விதழ்களின் வழி மக்களிடம் கொண்டு சேர்க்கின்றது இம்மடம்.
மக்கள் கல்வி நிலையத்தோடு, வேளாண் அறிவியல் ஆய்வு நிலையம் ஒன்றை குன்றக்குடியில் மையமாக அமைத்து விவசாயம் கால்நடை ஆகியவற்றிற்காண ஆய்வுக் கூடமாக இந்தப் பகுதி மக்களின் தேவைக்காக ஏற்படுத்தி நடத்தி வருகின்றது. பத்து ஆய்வுப் பேராசிரியர்களைக் கொண்டு இந்த வேளாண் ஆய்வு மையம் இயங்கி வருகின்றது். அதோடு குன்றக்குடியிலேயே தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றினை அமைத்து இங்கு சுற்று வட்டாரத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு தொழிற்பயிற்சியும் வழங்கி வருகின்றது குன்றக்குடி சைவத் திருமடம்.
பெண்களின் கல்வி மேம்பாட்டை மனதில் கொண்டு சாதாரண அடித்தளத்து பெண்களும் கல்வியில் உயர கல்வியியல் கல்லூரி என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருகின்றது இத்திருமடம். பாபனாசத்திலும் மகளிருக்கான தமிழ் மற்றும் நவீன தொழில் நுட்பக்கல்லூரி ஒன்று இயங்கி வருகின்றது. இதன் வழி வறுமையில் வாடும் பெண்கள் கல்வி பெற்று தங்கள் வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்ள இவ்வமைப்பு உதவி வருகின்றது.
இது மட்டுமல்ல.. இன்னும் பல சேவைகள். ஆதீனகர்த்தர் பொன்னம்பல சுவாமிகள் அவர்கள் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக வழங்கிய சிறப்பு பேட்டியில் இத்திருமடத்தின் செயல்பாடுகள் பற்றி விவரிக்கின்றார். கேட்டுப் பாருங்களேன்..!
பதிவு 1
முதல் பகுதி இங்கே இணைக்கப்பட்டுள்ளது.
த.ம.அ பேட்டிக்காக ஆதீனகர்த்தரைக் காணச் சென்றவர்கள்: முனைவர் வள்ளி, முனைவர்.காளைராசன், முனைவர் நா.கண்ணன், சுபா
1 comments:
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன குருமகா சந்நிதானம் தவத்திரு அடிகளார் அவர்கள் வழங்கிய பேட்டி கேட்டேன். பெண்களின் முன்னேற்றத்திற்குத் திருமடம் ஆற்றிவரும் பணிகளைக் கேட்டறிந்து மகிழ்ச்சியடைந்தேன். நல்லதைப் பதிவு செய்திட்ட த.ம.அ.க்கு என் உளம் நிறைந்த பாராட்டுகள்
அன்பன்
கி.காளைராசன்
Post a Comment