கிறிஸ்மஸ் விழா


திருமதி.ஸ்டெல்லா




கிறிஸ்மஸ் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் திருமதி ஸ்டெல்லா எவ்வேறு தமிழகத்தில் கிறிஸ்மஸ் விழா இந்திய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுகின்றது என்று விவரிக்கின்றார். நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் துணைவியார் இவர். இவர் இதுவரை 5 சமையல் கலை நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென்பகுதியான முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது சூழலில் எவ்வாறு கிறிஸ்மஸ் மற்றும் ஏனைய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என் மிகத் தெளிவாக விவரிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்


முனைவர்.மோஸஸ்




தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அல்லது நல்லை கவிராயர், சுவிஷேடக் கவிராயர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் தமிழறிஞர் முனைவர்.மோசஸ். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் நூல்களில் பல பெரும்பாலும் செய்யுள் வடிவம் கொண்டவை. -பெரும்பாலும் ஏசு பெருமானைப் பற்றிய பாடல்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டவை. 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். இதில் ஏறக்குறைய 10 நூல்களே இன்று நூல் வடிவில் கிடைக்கின்றன. பல நூல்கள் கையெழுத்துப் படிகளாக உள்ளன; இன்னமும் அச்சு வடிவம் பெற வில்லை. இவரது நூல்களான பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், ஞான தச்சன் நாடகம் போன்றவை அச்சு வடிவில் வந்து புகழ்பெற்ற நூல்கள். இவரது நூல்கள் மின்பதிப்பாக்கம் பெற வேண்டும் முனைவர்.மோஸஸ் இந்த பதிவில் விண்ணப்பிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

Workshop on Digital Preservation of Tamil Heritage Materials


வருகையாளர்களில் சிலர்



தமிழ் மரபு அறக்கட்டளையும் கணித்தமிழ் சங்கமும் இணைந்து நடத்திய கணித்தமிழ் பயிற்சிப்பட்டறை டிசம்பர் 6 தேதி சென்னையில் நடந்தது. அது போது பேராளர்கள் நிகழ்த்திய உரையின் ஒலிவடிவம் கேட்க கீழேயுள்ள சுட்டியைச் சொடுக்குக:


திரு.மாலன், முனைவர்.ராஜேந்திரன், திரு.லேணா தமிழ்வாணன்




உரை 1: ஆண்டோ பீட்டர், செயலர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 2: முனைவர் நா.கண்ணன், தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 3: சுபாஷினி டிரம்மல், துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.
உரை 4: மாலன், இதழியலர், ஆசிரியர்
உரை 5: பேரா.இராஜேந்திரன், துணை வேந்தர், தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
உரை 6: லேனா.தமிழ்வாணன், ஆசிரியர் கல்கண்டு, பதிப்பாளர்


சிறப்பு செய்யப்படுபவர்கள்

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness