திரு.எஸ்.ராமச்சந்திரனின் சில சமூகவியல் கருத்துக்கள் -2


இவ்வொலிப்பதிவின் முதல் பகுதியில் நாட்டார் வழக்காற்றியல், சமூகத்தில் அடிமைகள், தாசி என்பன பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. அவற்றை இங்கே வாசித்தும் கேட்டும் மகிழலாம்.

இன்றைய பதிவில் இடம்பெறும் தகவல்களைக் காண்போம்.

பதிவு 1 - விஷ்வபிராமணர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
 • விஷ்வ பிராமணர்கள் எனப்படுபவர்களின் வழக்குகள்
 • தைத்ரிய சம்ஹிதை என்பதன் பொருள்
 • சூத்ரங்கள் - அதன் உட்பொருள்கள்
என்பன போன்ற தகவல்களை வழங்குகின்றார்.பதிவு 2 - தூத்துக்குடியும் உப்பு வணிகத்துறையும்இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 
 • எப்படி முத்து அரசனுக்கு சொந்தமோ அதே போல உப்பு அரசனுக்கு சொந்தம் என்பது வழக்கு. 
 • தூத்துக்குடி பகுதியில் உப்பு உற்பத்தி அதிகம் உள்ளது. கடந்த 200 ஆண்டுகளாக இத்தொழில் ஈடுபட்டவர்கள் பண்ணையார் என்று அழைக்கப்படும் ஒரு சமூகத்தினர். 12ம் நூற்றாண்டு கல்வெட்டுக்களிலேயே இவர்களைப் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன; சித்திரவல்லி என்ற பட்டத்தோடு இவர்கள் குறிப்பிடப்படுகின்றார்கள். 
 • உப்பளத் தொழிலில் தூத்துக்குடி பரதவர்கள் அதிகம் ஈடுபடவில்லை. 
 • நாடார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உப்பு வியாபரத்தில் அதிகம் ஈடுபட்டிருக்கின்றனர்.
 • ராஜம் கிருஷ்ணனின் கரிப்பு மணிகள் எனும் நாவல் உப்பளத்து மக்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஒன்று. 
 • உப்பளத்தில் பணியாற்றும் மக்களோடு வாழ்ந்து அவர்களின் வாழ்க்கைச் செய்திகளைப் பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட ஒரு நாவல். 
இப்படி இவ்வொலிப்பதிவு செல்கையில் ராஜம் கிருஷ்ணனின் களப்பணிகள் பற்றி திருமதி.சீதாலட்சுமியும் விவரிக்கின்றார்.பதிவு 3 - பாண்டியர்கள்

இப்பதிவில் திரு.எஸ் ராமச்சந்திரன், 

கான் சாஹீப் எழுதிய கடிதம்
 • 1756ல் தென்காசி கோயிலைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவர்கள் புலித்தேவர்கள். இவர்கள் 11 பேரை சுட்டு கொன்று தென்காசி பகோடாவை தனது ஆளுமைக்குள் கொண்டுவந்ததாக கான்சாஹீப் கடிதம் எழுதுகின்றான்.
 • 1754ம் ஆண்டைச் சேர்ந்த தென்காசிப்பாண்டியர்களின் செம்பு பட்டையம் குற்றாலம் கோயிலில் உள்ளது.
 • புலித்தேவர் சமூகத்தின் வம்சமும் ஜாதியும் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. புலித்தேவரும் அவர் சமூகத்தினரும் மறவர் குலத்தினர் என்பதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களின் வம்சத்தாரும் இணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.  
 • தென்காசி பாண்டியர்கள் 18ம் நூற்றாண்டில் பலமாக இருந்த ஒரு தமிழ் பேசும் மறவர்கள் சமூகத்தினராக இருந்தனர். இவர்கள் மதுரை நாயக்கர்களுக்கு கட்டுப்பட்டவர்கள். ஆனாலும் தென்காசி ஊரின் வரி வசூல் உரிமை பாண்டியர்களிடம் அப்போது இல்லை. இந்த உரிமை வடகரை ஜமீனிடம் இருந்திருக்கின்றது.
 • எந்த பாளையப்பட்டுக்களும் தாம் பாண்டியர் வம்சத்தவர்கள் என்று தங்கள் உரிமையைக் கோரவில்லை.
கங்கைகொண்டான் சீர்மை நாடாள்வார் என்கின்ற பட்டமுடைய நாடாட்சி மரபினர் வேறு, மறவர்கள் வேறு என்பது தெளிவு என்று உறுதிபடுத்துகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்.
ஏறக்குறைய 30 நிமிட ஒலிப்பதிவு இது. புதிய விஷயங்கள் தெளிவான ஆண்டு வாரியான தகவல்களை வழங்குகின்றார் ஆய்வாளர் திரு.எஸ் ராமச்சந்திரன்


பதிவும் படங்களும் :சுபாஷினி 
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011

20 comments:

Parthi goc | January 10, 2016 at 7:17 AM

சித்திரவல்லி பற்றி நாட்டுப்புற கதை ஒன்று எங்களிடையே உண்டு. சோழமண்டலத்திலிருந்து இடம்பெயர்ந்ததிற்கு கல்வெட்டு சான்று எம்மிடம் உண்டு. பள்ளருடன் எம்மை ஒப்பிட வேண்டாம்.

Parthi goc | January 10, 2016 at 7:35 AM

எச்சமூகம் இந்நாட்டில் தாழ்ந்ததில்லை. எனினும் வரலாற்றை திருப்பும் பேச்சு வேண்டாம். முதலாம் குலோத்துங்கனின் வாரியூர் கல்வெட்டில் குடும்பன் அணி, மற்றும் சோழ சித்திரவல்லி அளித்த நுந்தாவிளக்கு பற்றி தெளிவாய் குறிப்பு உள்ளது. மேலும் அவர்களின் பெயரையே தெளிவாய் கூறியுள்ளது. அழகியசோழ சித்திரவல்லி, கண்டராதித்த சோழ சித்திரவல்லி, உய்யகொண்ட சோழ சித்திரவல்லி ஆகியன அவர்களின் பெயர்கள் ஆகும். மேலும் முதலாம் இராஜாதிராஜன் கல்வெட்டிலும் (சாமித்தோப்பு) தஞ்சையிலிருந்து வந்த மன்னரால் அனுப்பி வைக்கப்பட்ட உப்பள அதிகாரிகள் பற்றிய கல்வெட்டு பத்மநாபபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில் உள்ளது. மேலும் பண்ணையார் சமூகத்தினர் அதிகாரிகள் என்ற உயர்நிலையிலேயே அக்காலத்தில் நிலைகொண்டனர் என்பதை கொள்க.

siva | January 16, 2016 at 4:25 PM

பார்த்தி நண்பரே நீங்கள் குறிப்பிட்டது மிகவும் உண்மை.
ஆராய்ச்சியாளர்கள் உண்மை அறிந்து
பதிவுகள் போடவும்.
கட்டுக்கதைகளை
பதிவிடுவதை நிறுத்தி விடுங்கள்.
மேலும் இந்த பதிவை நீக்குமாறு அன்புடன்
கோட்டுக்கெள்கிறோம்
(தமிழ்நாடு பண்ணையார் சமுதாயம் சார்பில்)

siva | January 16, 2016 at 4:41 PM

பண்ணையார் சமுதாயம்
திருச்செந்தூர் அருகே உள்ள
முக்கானி என்ற ஊரில்

பண்ணையார் சமுதாயம் சார்ந்தவர்கள்
ஜமீன்தார்களாக 7 தலைமுறைகளாக
இருந்துள்ளார்கள். எம்மிடம் ஆதாரம் உள்ளது.நீங்க கூறியுள்ளது 200 வருடங்களாக
அளத்து வேலை செய்து வந்தனர்.


கல்வெட்டு ஆதாரம்
950 முன்னாள் வந்த உப்பளஅதிகாரிகள் என்று.நீ கூரும் பதிவு அத்தனையும்
அப்பட்டமான பொய்.


பதிவை நீக்குமாறு அன்புடன் கேட்டுக்கெள்கிறோம்.

மேலும்

திருச்செந்தூரில்
சூர சம்ஹாரம் நிகழ்ச்சியில்
வேல் பிடிக்கும் உரிமை
அன்றிலிருந்து இன்றுவரை
பண்ணையார் சமுதாயமே.

Anonymous | January 20, 2016 at 9:04 PM

கத்திக்காரன்,அழகர்,காராளர் என்ற பல பட்டங்கள் முற்காலத்தில் உண்டு பண்ணையார் சமூகத்திற்கு

Anonymous | January 20, 2016 at 9:18 PM

குலசையில் பண்ணையார் சமுதாய மக்கள் வணங்கும் விநாயகர் பெயர் மும்முடி சோழவிநாயகர். மேலும் கோரம்பள்ளம் பெரியநாச்சி அம்மன் எமது குலதெய்வம் ஆகும். இவ்வம்மன் தோற்றத்தில் நிசும்பசூதனி வடிவத்தை ஒத்திருக்கும். இவ்வாறு பல தரவுகளை கூறலாம். அளத்து வேலை பார்க்க எம்மக்களால் அழைத்து வரப்பட்டவர்களே போல்டன்புரம் பள்ளர் இன மக்கள். அவர்களை "அளத்துப்பள்ளர்" என அழைப்போம்.
நீங்கள் பெரியவர்கள் சரியான முறையில் களப்பணி செய்து உண்மையான தகவலை மட்டும் அச்சிலேற்றுங்கள்.
ஆயிரமாண்டு பாரம்பரியம் கொண்ட வரலாற்றை உமது அரைகுறை பதிவால் புண்படுத்தாதீர்.

siva | July 1, 2016 at 11:15 AM

சித்திரவில்லி பண்ணையார்கள்

பண்ணையார் சமுதாயம்
தஞ்சாவூர்கள்ளர் (ஈசநாட்டுக்கள்ளர்) ஒரு பட்டம்.
இராஜேந்திரசோழன் காலத்தில்
நாஞ்சில் நாடு பக்கம் பண்ணையார் படை வீரர்கள் (களப்படை) சென்றது.
அங்கு தங்கிவிட்டார்கள்
நாளடைவில் அவர்கள் தங்கள் இனத்தை மறந்து பட்டத்தை
தனி இனமாக மாற்றி விட்டனர்.

பண்ணையார் சிலம்பாட்டத்தின் அரசர்கள் ஆவார்கள்.பண்ணையார்களுக்கு தனி பட்டம் உள்ளது (சித்திரவில்லி)
தங்களின் மூதாதையர் கள்ளர் வழியில் வந்தவர்கள் என்பதை உணர்ந்து வருகிறது.

சோழர்கள் வழியில் வந்த கள்ளர் மரபினரே பண்ணையார் சமுதாயம்.


தங்களை வேளீர் வம்ச என்றும்
செம்பியர் இன மக்கள் என்றும்
கப்பல் படையினர் என்றும்
தெரிவிக்கின்றனர்.


சித்திரவில்லி சோழ மன்னராட்சியில்
விற்படை பிரிவில் இருந்துள்ளனர்.
கல்வெட்டு ஆதாரம் உள்ளது.

சித்திரவில்லி படை பிரிவு சோழமன்னர்களின் நேரடி விற்ப்படை பிரிவும் ஆகும்.

siva | July 1, 2016 at 11:22 AM

பண்ணையார் பட்டம் ஒரு கண்ணோட்டம்இராஜேந்திரசோழன் மன்னரால்
சுமத்ரா தீவில் கீழ்க்கரையில் அமைந்துள்ள பணையூர் என்னும் ஊரை வென்றதால் கப்பல் படை தளபதிகளுக்கு வழங்கப்பட்ட பட்டமே (பண்ணையார்) கள்ளர் குல பட்டங்களில் ஒன்றாகும்.

ஆனால் பண்ணையார் பட்டம் தாங்கிய கள்ளர்களே ஈசநாடு(தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தில்) பக்கம் கிடையாது.
பண்ணையார் பட்டத்துக்காரர்கள் தூத்துக்குடி பக்கமே உள்ளனர்.

Kalyan Lcc | July 1, 2016 at 11:37 AM

உண்மையை ஆராய்ந்து பதிவிடவும். மற்றொறு சமுதாயத்தினோடு ஒப்பிட்டு குறிப்பிட்டடது தவறாக தெறிகிறது.சில வரலாற்றை ஆராய்ந்து இந்த பதிவில் மாற்றம் செய்ய வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறோம்.

Mano Mahifa | July 1, 2016 at 12:16 PM

பதிவுகளை நன்கு ஆராய்ந்து போடவும்
இந்த பதிவை Delete செய்யவும்

Mano Mahifa | July 1, 2016 at 12:21 PM

Intha Post Thavaraanathu...Pannaiyar Enpavarkal Kallar kulathai Serthavarkal.
Emm Inathaii Thavaraga Aarainthu Pathivida. Unakku Urimai illai..
Delete the Post now

Karthik Fazer | July 1, 2016 at 1:19 PM

Pannnayar samuthayam mukkulathai serntha kallar pattangalail ondru

raj esh | July 1, 2016 at 4:09 PM

தவறான கருத்தை பதிவிட வேண்டாம்.
௨ங்க கருத்தை delete செய்யவும்.

Raj Sankar Jeyakumar | July 9, 2016 at 9:47 AM

Pannaiyar samuthaya mukkulathore samuthayam

Raj Sankar Jeyakumar | July 9, 2016 at 9:53 AM

Kallar pattam than Pannaiyar, mukkulathore ,Pannaiyar pallargal maathiri endru kooruvathu thavarana pathivai neeki vidavum, ellayeal ottu motha devar samuthayathaiyaum elivu paduthuvathakum....

Raj Sankar Jeyakumar | July 9, 2016 at 9:57 AM

Kallar pattam than Pannaiyar, mukkulathore ,Pannaiyar pallargal maathiri endru kooruvathu thavarana pathivai neeki vidavum, ellayeal ottu motha devar samuthayathaiyaum elivu paduthuvathakum....

siva | July 22, 2016 at 2:45 PM

பண்ணையார் சமுதாயம்


ஈசநாட்டுக்கள்ளர் குல பட்டத்திலிருந்து பிரிந்த சமுதாயம்


பண்ணையார்

கப்பற்படை தளபதிகளாகவும்

விற்படை வீரர்களாகவும்

இருந்துள்ளனர் சோழர் படைபிரிவில்

கல்வெட்டு ஆதாரம் கூருகிரது.பண்ணையார் சமுதாயமாக மாரிய காரணங்கள்


தஞ்சாவூரிலிருந்து

நாஞ்சில் நாடு பக்கம்

இடம்பெயர்ந்தன் மூலம் தனி சமுதாயமாக பிரிந்ததர்க்கு.


இவர்கள் ஈசநாட்டுக்கள்ளர் வம்சாவளிகளே
பண்ணையார் சமுதாயம் ஆகும்.


பண்ணையார்களுக்கு தனி பட்டமும் உண்டு.

சித்திரவில்லி ஆகும்.

சித்திரவில்லி என்பது

சோழர்களின்

நேரடி சிறப்பு விற்ப்படை பிரிவு ஆகும்


தங்களை

சூரிய குலம்

இந்திர வம்சாவளி
என்றும்
கூறுகின்றனர்இவை அனைத்தும்

கல்வெட்டு ஆதாரம் ஆகும்.

sri parthi | March 13, 2017 at 9:53 AM

jaathigal illaiyadi pappa......

பன்னையார் | August 7, 2017 at 3:33 AM

வரலாற்றை தவறாக பதிவிட வேண்டாம்.தஞ்சை கள்ளர் தான் பண்ணையார்கள். ஒலி நாடாவை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் சட்ட ரீதியான வழக்கு பதிவு செய்யப்படும்.

swamynatha pillai | February 19, 2018 at 6:32 AM

pannaiyar Samthuthayam, Kallarum illai, pallarum illai. Ipperyarkal yavum tharpothu avargal samuthyathirku erpavaru karuthukolkirargal.

Pannaiyar endru kallarkaviyam puththagathil kuripittrkalam, apdi endral, Nelam vaithirpagalum pannaiyar than (landlords), pillai, mudaliyar pondravargalium pannaiyar enapargal, adharkaga avargalum icsamugathod kurupidamudiyuma.

Na kandarindha thavagalin padi, Icchamugam senguthar mudaliyar vagaiyil varum.

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness