வணக்கம்.
தூத்துக்குடிக்கு 2011ம் ஆண்டில் நான் சென்றிருந்த போது வ.உ.சி. கல்லூரிக்குச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. திரு. துரை அவர்களும் என்னுடன் வந்திருந்தார்கள். அச்சமயம் வ.உ.சிதம்பரம் அவர்களின் பெயரில் இயங்கி வரும் கல்லூரிக்குச் சென்றிருந்தோம். கல்லூரி முதல்வர் இக்கல்லூரியை விளக்கி அறிமுகம் செய்யும் ஒரு பேட்டியினைப் பதிவு செய்திருந்தேன். கல்லூரி முதல்வர் திரு.ப்ரான்ஸிஸ் அவர்கள் இப்பேட்டியை வழங்குகின்றார்கள்.
இப்பேட்டியில்
- 1951ம் ஆண்டு வ.உ.சியின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட கல்லூரி.
- வ.உ.சி. கல்விக்கழகம்
- வ.உ.சி நினைவாக ஒரு மணி மண்டபம் கட்டலாம் என்று தொடங்கிய இத்திட்டம் பின்னர் சமூகத்திற்கு கல்விச் சேவை வழங்கும் வகையில் பயன்படும் வகையில் கல்லூரியாக ஏற்படுத்தப்பட்டது.
- வந்தே மாதரம் என்ற கோஷம் பொறிக்கப்பட்ட முகப்புடன் இக்கல்லூரி உள்ளது.
- சமயச் சார்பின்மைக்கு வாழும் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது இக்கல்லூரி. இக்கல்லூரியை ஏற்படுத்தியவர்கள் தீவிர சைவ சமயத்தினராக இருந்தாலும் இக்கல்லூரியில் எங்குமே சமயச் சின்னங்கள் இல்லாமல் சமயச் சார்பின்மை இல்லாமல் கல்வியை மட்டுமே முன்னிலைப் படுத்தி ஏற்படுத்தப்படுத்தியுள்ளனர்.
- கல்லூரியில் இயங்கி வரும் துறைகள் ஆய்வுகள்
குறிப்பு: பயணத்திற்கான உதவிகள் செய்த திரு.திருமதி துரை, திருமதி சீதாலட்சுமி ஆகியோருக்கு என் நன்றி.
வ.உ.சி அவர்கள் பற்றிய சில பதிவுகள் நமது வலைத்தளத்தில் உள்ளன அவற்றை
ஆகிய பக்கங்களில் காணலாம்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
0 comments:
Post a Comment