வையம் விரிந்த தமிழன் - பேரா.டாக்டர்.நா.கண்ணன் உரை

To listen to the speech Click here!

ஆதி.குமணன் என்பவர் நடு வயதில் மரித்த திறமையான மலேசியப் பத்திரிக்கை ஆசிரியர், முற்போக்கு எழுத்தாளர், அரசியல் விமர்சகர். அவரது 66 அகவை நினைக் கூட்டமொன்று செவ்வாயன்று (பிப்ரவரி 9, 2016) நடந்தது. ஆதி குமணனின் சகோதரர் ஆதி.ராஜகுமாரன் என் நீண்ட நாள் நண்பர். தமிழ் இணையம் தோன்றிய காலத்து நண்பர்.டமிழுக்கு "இணையம்" என்ற சொல்லைத்தந்த நண்பர். 2011ம் ஆண்டு என்னைப் பேச வைத்தார்.



அது சமயம் நான் கொரியாவிலிருந்தேன். அங்கிருந்தே ஸ்கைப் வசதி கொண்டு பேசினேன். கேள்விகளுக்குப் பதில் சொன்னேன். அப்போது பேசிய பேச்சு நமது நிகழ்கலை வலைப்பதிவில் காணக்கிடைக்கிறது.

http://www.authorstream.com/Presentation/nkannan-839911-tamil-korean-relationship/

இப்போது நான் மலேசியாவிற்கே வந்துவிட்டதால் மீண்டும் என்னைப் பேச அழைத்திருந்தார் திரு.ராஜகுமாரன். இது சீனப்புத்தாண்டு விடுமுறை காலம். எல்லோரும் ஹாய்யாக தொலைக்காட்சியை குடும்ப சகிதம் கண்டு மகிழும் விடுமுறைக் காலம். ஆனால், வேலை மெனக்கெட்டு இந்த நிகழ்ச்சிக்கு 70 பேருக்கும் மேல் வந்திருந்தனர்.



இதைக்குறிப்பிடும் போது ராஜகுமாரன் இக்கூட்டம் ஆதிகுமணனின் நினைப் போற்றவும், நா.கண்ணனின் பேச்சை ரசிக்கவும் வந்த கூட்டமொன்றார் ;- உண்மையில் பல நண்பர்கள் என்னிடம் அவ்விதமே சொன்னர். மகிழ்வாக இருந்தது.



உலகமெலாம் உணர்ந்து ஓதற்கரியவன், உலகம் யாவையும் தாமுளவாக்கலும், ஆதிபகவன் முதற்றே உலகு என்று உலக நாகரீகங்கள் விழித்துக்கொள்ளுமுன் உலகப்பார்வையில் பேசியவன் தமிழன். லோகா சமஸ்தா சுகினோ பவந்து என்பதும் பொதுவான இந்தியப் பார்வை. சங்கப்பாடல்கள் நாவலத்தீவு என்று இந்திய உபகண்டம் முழுமையும் கண்டு பேசுவது ஆச்சர்யம். பூகோள பகோள விஷயம் போன்ற பேச்சுக்கள் பூமி தாண்டி நிலாப்பேச்சு பேசுகிறது.

வையம் விரிந்த பார்வை இருந்ததால்தான் அவன் "யாதும் ஊரே! யாவரும் கேளிர்" என்று சொன்னான். வாழ்வின் நிலையாமை கண்டு பெரியோரை வியத்தலும் இலமே, சிறியரை இகழ்தல் அதனினும் இலமே! எனும் முதிர்ச்சியான பார்வை கொண்டிருந்தான். மேற்கே ரோமாபுரியிலிருந்து கிழக்கே ஜப்பான்வரை இவனது போக்குவரத்து இருந்திருப்பதற்கான ஆதரங்கள் மெல்ல, மெல்ல வெளிப்படுகின்றன.

ஈழச்சமருக்குப் பின் இடப்பெயர்ந்த தமிழன் இப்போது உலகெலாம் வாழ்கிறான். தமிழ் கூறு நல்லுலகில் சூரியன் மறைவதே இல்லை!



அந்த உலகளாவிய பார்வை மீண்டும் தமிழனுக்கு வர வேண்டும். அவனது குறுகிய பார்வைகள் நீங்க வேண்டும். சங்கம் காட்டிய அழகுணர்ச்சி, மெல்லிய உணர்வுகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். உலக அரங்கில் மதிக்கத்தக்க மனிதனாக தமிழன் மீண்டும் உலா வர வேண்டும்!


முகநூல் பதிவுகள்:

https://www.facebook.com/narayanan.kannan.37/posts/10153907493197299
https://www.facebook.com/narayanan.kannan.37/posts/10153911506192299

நா.கண்ணன்

புத்திருக்கு (உள்மூலம்) மருந்து

மனிதர்களுக்கு மரண வேதனை தரும் நோய்களுள்  ஒன்று உள்மூலம். நவீன மருத்துவத்தில் பெரும் பொருட்செலவில்  அறுவைச்சிகிச்சை செய்கின்றனர். ஆனால் வலியே இல்லாமல் மூன்றே நாட்களில் இம் மூலிகை குணம் அளிக்கிறது. - காளைராசன் (காரைக்குடி)

ஒலிப்பதிவைக் கேட்க





நெஞ்சுறம் (காத்துவெட்டி மருந்து)

இருசக்கர வாகன விபத்தில் சிக்கிய பலருக்கும், மாடிப்படியில் தவறி விழுவோருக்கும் நெஞ்சில் அடிபடுகிறது.  இதற்கு வைத்தியம் செய்யப் பெரும் பொருள் செலவு ஆகிறது. வயதானோருக்குக் குணமாகத நிலையும் ஏற்படுகிறது.
இதற்கு காத்துவெட்டி இலை சிறந்த மருந்து.
ஒலிப்பதிவைக் கேட்கவும். -
காளைராசன் (காரைக்குடி)





கிணற்றுப்பாசான்

"தலையே வெட்டுப் பட்டாலும் இந்த மூலிகையின் இலையைப் பயன்படுத்தி ஒட்ட வைத்து விடலாம்", அதனால்தான் இதற்கு இந்தப் பெயர் வந்தது என்கின்றனர். இதன் பெயர்  கிணற்றுப்பாசான் என்றும் சொல்கின்றனர்.

சாலைகளின் ஓரங்களில் இதை வெகுவாகக் காணலாம். சிறுவர்கள் இதன் பூவைக் காம்புடன் பறித்துக் கையினால் பூவைச் சுண்டி விலையாடுவதையும் பார்த்திருக்கலாம்.


இதன் இலைகளைப் பறித்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடிசெய்து சலித்து எடுத்து வைத்துக் கொள்ள  வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட, தங்கப்பசுப்பம் சாப்பிட்டது போன்று  உடல் பொலிவு பெறும். பத்தியம் இல்லை.

மேற்கண்ட வைத்தியத்தைக் கூறியவர்: சிவகங்கை மாவட்டம் முடிகண்டம் கிராமம் காசிஸ்ரீ சோலைகிரி.

இதே மூலிகை வெட்டுக் காயங்களுக்கும் சிராய்ப்புக் காயங்களுக்கும் கண்கண்ட மருந்து. வயல்களில் மண்வெட்டிக்காயம், மரவேலை செய்யும் போது வெட்டுக்காயம் அடைந்தோர் இம்மூலிகையைப் பயன்படுத்துகின்றனர்.

தலைவெட்டி இலையைப் பறித்து கையில் வைத்துக் கசக்கிச் சாறு பிழிந்து காயத்தில் விட வேண்டும். டிஞ்சர் தடவியது போன்று எரிச்சல் ஏற்படும். வேதனையைப் பொருத்துக் கொள்ள வேண்டும். பத்தியம் இல்லை.
பக்க  விளைவுகள் ஏதும் ஏற்படாது.
நடைப்பயணத்தில் காயங்கள் ஏற்பட்டாலும்  இது ஒரு கண்கண்ட மருந்து.

சென்னையைச் சேர்ந்த திரு.தனசேகரன் அவர்களது அனுபவத்தைக் கூறினார். அவரது செவ்வியை இணைத்துள்ளேன். - காளைராசன்

பதிவைக் கேட்க 


குலவை

எங்களது குலதெய்வவழிபாட்டின்போது பதிவு செய்த குலவை ஒலிப்பதிவுகள் இரண்டை இத்துடன் இணைத்துள்ளேன்.  பல கோயில்களிலும் குலவைபோடுவதைக் கேட்டுள்ளேன்.  அப்போதெல்லாம் வழிபாட்டிலேயே கவனம் செலுத்திவிடுவதால் இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்தது கிடையாது. இனிமேல் குலவைபோடுவதை ஆராய்ந்து அவ்வப்போது எழுதுகிறேன்.  நேற்றுக்கூட மதுரை அழகர்கோயிலில் தீர்த்தமாடி யிருந்தபோது, சிங்கம்புணரி குலாளர்கள் குலவைபோட்டு குலசாமியை இறக்கிக் கும்பிட்டனர்.

பதிவு 1
பதிவு 2

அன்பன்
கி.காளைராசன்

தினமணி இலக்கிய விழா - என்னை செதுக்கிய இலக்கியம் *தமிழருவி மணியன்

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் திரு.தமிழருவி மணியன் அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.

ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] ​

தினமணி இலக்கிய விழா - என்னை செதுக்கிய இலக்கியம் *திரு.திருச்சி சிவா

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் திரு.திருச்சி சிவா அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.



ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

தினமணி இலக்கிய விழா - திருமதி.சுபாஷிணி

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமதி.சுபாஷிணி  ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.



ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

தினமணி இலக்கிய விழா - மாலன் நாராயணன்

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் செயற்குழு உறுப்பினர் திரு.மாலன் நாராயணன் அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.


ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி 
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

தினமணி இலக்கிய விழா - பேராசிரியர்.டாக்டர்.நா.கண்ணன்

வணக்கம்.

21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர்.டாக்டர்.நா.கண்ணன் அவர்கள் ஆற்றிய உரை ஒலிப்பதிவாக மண்ணின் குரல் வெளியீடாக வெளியிடப்படுகின்றது.



ஒலிப்பதிவைக் கேட்க இங்கே செல்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

கொங்கு தமிழில் - நெல்லுக்குப் பாயிர தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

வட்டார வழக்கு நம் தமிழ் மொழிக்கு சிறப்புச் சேர்க்கும் ஒரு அம்சம். தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் தமிழ்மொழி பயன்பாட்டில் ஒலி வேறுபாடும் சொற்கள் அமைப்பில் வேறுபாடும் இருப்பதை நாம் அறிவோம்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் முயற்சிகளில் ஒன்றாக வட்டார வழக்குகளின் பதிவை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.  அந்த வகையில் இன்று கொங்கு தமிழில் ஒரு சிறுகதை வெளியீடு செய்யப்படுகின்றது.

கதையின் தலைப்பு: நெல்லுக்குப் பாயிர தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்
எழுதி வாசிப்பவர்: பவளசங்கரி திருநாவுக்கரசு

கதையைக் கேட்க!

அன்புடன்
முனைவர்.க. சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை] 

இந்து உணவுப்பழக்கம்-காரண, காரியங்கள்

மதங்களும், தத்துவ தரிசனங்களும் தோன்றும் முன் கண்டதைத்தின்று உயிர் வளர்த்தான் தமிழன். ஆனால் நாகரீகத்தின் ஆரம்ப கட்டத்திலேயே உணவு பற்றிய தெளிவு தமிழனுக்கு வந்துவிட்டது. பின் சித்தர்களும், யோகிகளும் உணவுப் பழக்கத்தைச் செம்மைப்படுத்தி வழங்குகின்றனர். உலகிலேயே எங்குமில்லா அதிசயமாக இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 700 மில்லியன் மக்கள் சாத்வீக, மரக்கறி உணவுப்பழக்கத்தைக் கொண்டவர்களாக உள்ளனர். இது உடலுக்கு, உள்ளத்திற்கு, உலகிற்கு நல்லது என்று கண்டு சொன்னது இந்தியப்பங்களிப்பு.

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக உணவுத்துறை மாணவியின் கேள்விகளுக்கு ஆங்கிலம் கலந்த தமிழ் நடையில் பதிலளிக்கிறார் பேராசிரியர், முனைவர் நா.கண்ணன்.

உரை கேட்க சொடுக்க!

வியட்நாமில் தமிழ்க்குரல்!

சங்காலம் தொட்டுத் தமிழன் கிழக்கும், மேற்கும் பயணித்த வண்ணமேயுள்ளான். பல்வேறு காலக்கட்டங்களில் கிழக்கே பயணப்பட்டு அங்கேயே தங்கிவிட்ட தமிழர்கள் அந்தந்த கலாச்சாரத்துடன் ஒன்றிவிட்டனர். அவ்வகையில் வியட்நாம் நாட்டின் சைகோன் (ஹே சி மின்) நகரில் தங்கி அங்கு இந்துக் கோயில்களை உருவாக்கிவிட்டு பின் போர்ச்சூழலில் வியட்நாமை விட்டு வெளியேறிய தமிழர்களின் பண்பாட்டு எச்சம் இன்றளவும் காணக்கிடைப்பதாக உள்ளது. சைகோன் மாரியம்மன் கோவில் பூசாரியின் மகன் ரமேஷ் எங்களுடன் உரையாடிய போது பதிவு செய்த ஒலிப்பதிவு இங்கே!

குமாரபாளையும் எஸ்.எஸ்.எம் கல்லூரி ஸ்தாபகரின் புதல்வியும், அதன் தலைவர் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களின் மூத்த சகோதரியுமான திருமதி இராஜம்மாள், உடலியல் உபாதைகளுக்குத்தோற்றக்காரணி யாது எனும் கேள்விக்கு இங்கு பதிலளிக்கிறார். எப்போதும், ஈஷ்வர பட்டரைத் தியானித்து அவர் மூலமாக பதில் சொல்லும் திருமதி இராஜம்மாள் இப்பேட்டியின் இடையிலும் திடீரென்று தொடர்பு விட்டுப்போன வானொலி ஒலிபரப்பு போல் சில நொடிகள் அப்படியே பேசுவதை நிறுத்திவிடுகிறார். பின் விட்ட இடத்திலிருந்து ஒரு வானொலி செயல்படுவது தொடர்ந்து பேசிச் செயல்படுகிறார். கன்னட மொழியைத் தாய்மொழியாகக் கொண்டாலும் அவரது தெள்ளிய தமிழ் நம்மை ஆச்சர்யத்தில் வைக்கிறது.

இதோ அவரது பேட்டி!

ஆன்ம வளர்ச்சியின் படிகள் - திருமதி இராஜம்மாள் பேட்டி

குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் கல்லூரியின் ஸ்தாபகரும், கல்வியாளருமான திரு.மாரியப்ப செட்டி அவர்களின் குமாரத்தியாகிய திருமதி.இராஜம்மாள் அவர்கள் உயிர்ப்பின் ஆரம்பு நிலை, வளர்ச்சி பற்றியும், ஆன்மா எங்கிருந்து தன்னை வளப்படுத்திக்கொள்கிறது, அது எப்படி அழிவற்ற நிலையான வாழ்வை எட்டமுடிகிறது எனும் பொருள் பற்றி இங்கு பேசுகிறார். பள்ளியிறுதிவரை படிக்காத இராம்மாள் அறிவியல் உண்மைகளையெல்லாம் அழகு தமிழில் சொல்லும் போது, இவர்தான் பேசுகிறாரா? இல்லை இவருள் வேறொருவர் இருந்து கொண்டு பேசுகிறாரா? என்ற கேள்வி எழும். நாம் அவரிடம் கேட்டால், உண்மையில் தன்னுள்ளிருந்து ஈஷ்வர பட்டர் எனும் மகரிஷி பேசுவதாகச் சொல்கிறார். இச்செயற்பாட்டின் மூலமாக பல்வேறு நன்னெறி நூல்களை வெளியிட்டுள்ளார் திருமதி.இராஜம்மாள். குமாரபாளையத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து பௌர்ணமியன்று வழிபாடு செய்து எல்லோரும் உய்வுறும் வண்ணம் செயல்படுகிறார். தமிழ் மரபு அறக்கட்டளையும், எஸ்.எஸ்.எம் கல்லூரியும் இணைந்து உருவாக்கிய தமிழ் மரபு மையம் திறப்பு விழா நிகழ்ச்சியின் போது அம்மாவைப் பேட்டிகாண முடிந்தது. தமிழ் மரபு அறக்கட்டளைக்காக நேரம் ஒதுக்கி இப்பேட்டியை வழங்கியமைக்கு நன்றி. இப்பேட்டிக்கு வழிவகுத்த அவரது சகோதரர் செவாலியர் டாக்டர் மதிவாணன் அவர்களுக்கு நன்றி. எஸ்.எஸ்.எம் கல்லூரியின் தலைவரான அவர், அம்மாவைப் பேட்டி காண வேண்டும் என்ற அவாவைச் சொன்ன போது உடனே அதற்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றி. இப்பேட்டி தமிழ் மரபு அறக்கட்டளையின் தலைவர் பேராசிரியர், முனைவர். நா.கண்ணன் அவர்களால் காணப்படுகிறது.

இப்பேட்டியைக் கேட்க இங்கே சொடுக்குக!

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness