ஈழத்துப்புலவரின் தமிழ்த்தாய் வாழ்த்து

புலவர் சிவநாதனின் தமிழ்மொழி வாழ்த்து!

சீருடைச் செந்தமிழ் மகள் வாழி! எம்
சிந்தையில் நிறைந்த அவள் வாழி
போருடைப் புறமும் அன்புடை யகமும்
போர்த்த பேரழகாள் புகழ் வாழி!

ஆரமாயியலோடு தேனிசை நாடகம்
அணிந்தவள் சங்கம் தனிலூறிச்
சாரமாய் வடிந்த காவியச் சோலையில்
களி நடம் பயின்றவள் பேர் வாழி!

ஏருடை நிலமுங் காருடை வளமும்
தாருடை அரசும் இல்லாமல்
பாரினில லையுந் தமிழரை யிணைத்தே
வீறுடைச் செல்வியாய் அவள் வாழி

இப்பாடலை இசை அமைத்துப் பாடியுள்ளார் இலண்டனைச் சேர்ந்த மாதினி ஸ்ரீஸ்கந்தராஜா.

பாடல் கேட்க!

2 comments:

விச்சு | May 17, 2012 at 3:54 AM

பாடல் கேட்டேன். மனம் மயங்கி கிடந்தது.

விச்சு | May 17, 2012 at 3:55 AM

audioவை பதிவில் எப்படி சேர்ப்பது? ப்ளீஸ் எனக்கு மெயில் அனுப்புங்கோ.
c.marimuthu1@gmail.com

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness