வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளை பதிவுகளுக்காக 2011ல் நான் தமிழகம் சென்றிருந்த போது திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்களுடன் செய்யப்பட்ட ஒரு பேட்டியின் இரண்டு பதிவுகள் இந்த மண்ணின் குரல் வெளியீட்டில் இடம்பெறுகின்றன. திரு.எஸ் ராமச்சந்திரன் அவர்கள் தொல்லியல், சமூகவியல், வரலாற்று ஆய்வாளர். இவரது மேலும் சில கட்டுரைகளும் ஒலிப்பதிவுகளும் முன்னரே நமது வலைப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மேலும் இரண்டு பதிவுகள் தொடர்கின்றன.
பதிவு 1
- நாட்டார் வழக்காற்றியல் என்பது சரியான பதமா?
- செம்மொழி, செவ்வியல் என்பதன் பொருள் என்ன?
- கொடுந்தமிழ் செந்தமிழ் இரண்டுக்குமான் சமூகவியல் விளக்கம்.
- கிராமிய தெய்வங்களும் பெருந்தெய்வங்கள் எனக் குறிப்பிடப்படும் தெய்வங்களையும் வெவ்வேறு சமூகங்களுக்கு உரியன என சொல்லப்படுவது சரியா?
- வேற்றியல் பொதிவியல் பற்றிய விளக்கம்.
இவற்றுடன் ராவணன் பற்றிய ஒரு சுவையான ஒரு குறிப்பையும் தருகின்றார்
பதிவு 2
சமூகத்தில் அடிமைகள் - இது ஒரு கலவையான பதிவு. திரு.எஸ்.ராமச்சந்திரன் அவர்கள் ஒப்பந்தக் கூலி, ஆப்பிரிக்காவில் ஒப்பந்தக் கூலிகளின் நிலை, காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க உரிமைப்போராட்டம், தில்லையாடி வள்ளியம்மை பற்றிய தகவல்கள் எனப் பகிர்ந்து கொள்கின்றார். தொடர்ந்து திருமதி.சீதாலட்சுமி தமது ஆஸ்திரேலிய பயண ஆய்வு அனுபவத்தில் அங்கு பெண்கள் சமூகத்தில் நிகழ்ந்த சில சமூக அவலங்களைப் பற்றி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களோடு திரு.நடேச நாடாரும் தனது கருத்துக்களை இடைக்கிடையே பகிர்ந்து கொள்கின்றார்.
பதிவு 3
- தாசி என்ற சொல்லின் பண்டைய பொருள்..
- சமூகவியல் பார்வையில் ஜாதிகள்
- வைசியர்கள் எனப்படும் குழுவில் அடங்குபவர்கள் வர்த்தகம் செய்யும் குழுக்கள் மட்டுமல்ல எனக் கூறி இக்குழுவில் பண்டைய காலத்தில் அடங்கிய உப குழுக்கள் பற்றிய விளக்கம்
- பிராமணர்கள் எனப்படும் குழுவில் அடங்குபவர்கள் வைதீக பிராமணர்கள் கோயில் குருக்கள்கள் மட்டுமல்ல எனக் கூறி இக்குழுவில் பண்டைய காலத்தில் அடங்கிய உப குழுக்கள் பற்றிய விளக்கம்
- ஷத்திரியர்கள் எனப்படும் குழுக்கள்
என விளக்கம் செல்கின்றது.
இந்த உரையாடலின் போது திருமதி சீதாலட்சுமி அவர்கள் ராஜாஜி அவர்களின் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.
- சுயமரியாதை இயக்கம்
- ஜாதி என்பதன் தோற்றம், அதிகார போதை
- ஜாதி தோற்றத்துக்கு முற்பட்ட சமூக நிலை
- ஜாதி சண்டைகள், ஜாதியினால் ஏற்படும் சமூக அவலங்கள்
பற்றி சீதாலட்சுமி அவர்களின் கருத்துக்கள் தொடர்கின்றன.
- வர்ணம் என்பதற்கும் ஜாதி என்பதற்கும் உள்ள வேறுபாடுகள் பற்றி மேலும் திரு. எஸ்.ராமச்சந்திரன் தொடர்கின்றார்.
- இரண்டு ஜாதியின் கலப்பில் பிறக்கும் ஒரு குழந்தை மூன்றாவது ஜாதியாக மாறுமா..? சில கல்வெட்டுச் சான்றுகள்.
- கி.பி 13ம் நூற்றாண்டுக்குப் பிறகு ஜாதி எனப்படும் சமூக அமைப்பில் உள்ள நிலையே தற்கால நிலை வரை தொடர்வது
என்று தனது விளக்கத்தை வழங்குகின்றார் திரு.எஸ்.ராமச்சந்திரன்.
பதிவு:சுபாஷினி
பதிவுக்கான ஏற்பாடு:திருமதி.சீதாலட்சுமி
பதிவு செய்யப்பட்ட நாள்: 19.3.2011
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
0 comments:
Post a Comment