வணக்கம்.
ராஜபாளையம் என்றால் நினைவுக்கு வருபர்கள் ராஜூக்கள் சமூகத்தினர்.; நினைவுக்கு வருவது பருத்தி வியாபாரம். இந்த ராஜூக்களைப் பற்றி தெரிந்து கொள்ள நான் மேற்கொண்ட முயற்சியில் எனக்கு உதவி செய்தவர் நமது அன்புக்குறிய சீத்தாம்மா (திருமதி. சீதாலட்சுமி) சென்ற ஆண்டு 2011 மார்ச் மாதம் நான் தமிழகம் சென்றிருந்த போது சரித்திர ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்து ராஜூக்கள் சமூகத்தைப் பற்றியும் ராஜபாளையம் பருத்தி உற்பத்தி பற்றியும் கேட்டு அறிந்து கொண்டேன். அதனை ஒலிப்பதிவாக பதிவாக்கியுள்ளேன். இந்தப் பதிவில்
- ராஜூக்கள் தெலுங்கு பாரம்பரியத்தைச் சார்ந்தவர்கள்
- இவர்கள் 400 வருடங்களுக்கு முன்னர் இன்றைய தமிழகத்துக்குப் பாளையக்காரர்களாக வந்தவர்கள்
- விவசாயத்தில் முதலில் ஈடுபட்டாலும் பின்னர் பருத்தி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள்
- இன்னமும் ராஜபாளையத்தில் சத்திரிய ராஜூக்கள் என்ற ஒரு குடியினர் இருக்கின்றனர்
- இங்கே வலங்கை என்ற பெயரிலேயே ஒரு கோயில் இருக்கின்றது
இந்தப் பேட்டியின் போது எங்களுடன் எழுத்தாளர் மதுமிதாவும் உடன் வந்திருந்தார். திரு.நடேச நாடாரின் இல்லத்தில் இப்பேட்டியை நாங்கள் பதிவாக்கினோம்.திரு.ராமச்சந்திரன் விளக்கம் தர அவ்விளக்கங்களுக்கு மேலும் தகவலை வழங்கி இப் பேட்டிக்குச் சிற்ப்பு சேர்க்கின்றனர் மதுமிதாவும் சீதாம்மாவும்.
சுதந்திர போராட்ட காலகட்டத்தில் காந்தி ராட்டினத்தை அறிமுகப்படுத்திய போது ராஜபாளையத்து பருத்தியில் நெய்யப்பட்ட கதர் ஆடை சிறப்பானது என காந்திஜி சொன்னதாகவும் இப்பேட்டியில் மதுமிதா குறிப்பிடுகின்றார்
இப்பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திருமதி. சீத்தாலட்சுமி, எழுத்தாளர் மதுமிதா, சுபா, திரு.நடேச நாடார்,திரு.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர்.
இப்பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திருமதி. சீத்தாலட்சுமி, எழுத்தாளர் மதுமிதா, சுபா, திரு.நடேச நாடார்,திரு.எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர்.
அன்புடன்
சுபா
[தமிழ் மரபு அறக்கட்டளை]
1 comments:
எங்கள் அருகாமை ஊரைப் பற்றிய ஒரு பதிவு. பதிவாக்கியமைக்கு நன்றிகள் பல. எங்கள் ஊரே காட்டன் மில்களை நம்பிதான் உள்ளன.ஆனால் தற்போது விவசாயம் குறைந்து பருத்தி தொழிலும் நலிவடைந்து வருகிறது
Post a Comment