இந்த நாவலைப் பற்றி விளக்கும் போதே இதன் தொடர்பில் ஏலக்காய் எஸ்டேட்களில் இருக்கின்ற சூழலையும் மிக ஆழமாக விளக்குகின்றார் இந்தப் பேட்டியில்.இந்த நூல் இந்தியாவின் சிறந்த புத்தகமாக ஜனாதிபதியின் பரிசு பெற்ற ஒரு நூல்.
இவரது நாவல்கள் ஏலச் சிகரம். கிறிஞ்சாம் பூ போன்றவை மலைவாழ் மக்களின் குறிஞ்சித் திணை மக்களின் வாழ்க்கையை அலசுவதாக அமைந்துள்ளமை தனிச் சிறப்பு.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை துன்பம் நிறைந்தது. அன்றாட வாழ்க்கையை மட்டுமே கவனித்தக்கதாக அமைந்தது இவர்களது வாழ்க்கை. சமுதாயம், கற்பு நிலை, வருங்காலத்திற்கு சேமித்தல் என்பன போன்ற சிந்தனைகளே தோன்றாத ஒரு சூழலில் வாழ்பவர்கள். நிரந்தரமான குடிசைகள் அற்ற நிலையில் தங்குவதற்கும் இடமில்லாமல் கஷ்டப்பட்ட மக்கள் இவர்கள். இம்மக்கள் பழையர்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்னர். சாதிப்பெயரைச் சொல்லி திட்டுவது அடிப்பது போன்றவற்றை தவிர்ப்பதற்காக ஒரு குழுவை அப்போதைய அரசு ஏற்படுத்தியது. கிராமத்தில் கலெக்டருடன் சேர்ந்து திரு.கோமா கோதண்டம் அவர்களும் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டிருந்தார். மலைவாழ் மக்களைப் பற்றி தொடர்ந்து இவர் எழுதி வந்த நாவல்களினால் ஏற்பட்ட தாக்கம் இவர் இவ்வகைப் பணியில் ஈடுபட தகுதியானவர் என்ற வாய்ப்பை அமைத்துக் கொடுத்தது. அதன் அடிப்படையில் மலைவாழ் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணி ஆர்ம்பித்தது.
மலைவாழ் மக்களின் வாழ்க்கை வித்தியாசமானது. நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பவர்கள் அல்ல. ஒரு நாள் ஒரு ஊரில் என நகர்ந்து நகர்ந்து செல்வதால் இவர்கள் நிரந்ததரமாக ஓரிடத்தில் இருக்கும் வகையில் இவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதில் கூட சிரமம் ஏற்பட்டிருக்கின்றது. இவைகளைச் சேகரித்து கணக்கெடுப்பு எடுத்து வீடுகட்ட பணிகள் நடந்தது. இதன் அடிப்படையில் அச்சமயம் 20 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அவ்வகையில் வீடுகள் கட்டி கொண்டிருக்கும் போது இவரே நேராகச் சென்று பார்க்கையில் தரமில்லாத பொருட்களைக் கொண்டு அவ்வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருந்தமை பற்றியும் அதற்கு அவர்கள் தெரிவித்த காரணங்களைப் பற்றியும் இந்தப் பதிவில் நம்முடன் பகிர்ந்து கொள்கின்ற்றர்.
கோமா கோதண்டம் அவர்கள் 300க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள் எழுதியிருக்கின்றார். இவை குறிஞ்சித் திணை மிருகங்களைப் பற்றி அமைந்தவை. நேரடியாக மலைப்பகுதிக்குச் சென்று அங்குள்ள வன விலங்குகளைப் பார்த்து அவற்றின் தன்மைகளை மனதில் உருவகித்துக் கொண்டு இவர் கதைகளைப் படைத்திருக்கின்றார்.
இவரது களப்பணிகளை அந்த நாட்களுக்கே சென்று சுவாரசியமான அந்த ஞாபகங்களை நம்முடன் இப்பேட்டியில் பகிர்ந்து கொள்கின்றார். காட்டில் செல்லும் போது யானை வந்த கதை, உப்பு தின்ற ஒரு குறங்கு பற்றிய கதை.. காட்டில் களப்பணிக்குச் சென்ற போது தீப்பற்றிக் கொண்ட கதை என சில கதைகள் ஏற்பட பின்னனியாக அமைந்த் காரணங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கின்றார்.
இதுவரை 83 நூல்கள் இவரது எழுத்தில் வெளிவந்துள்ளன. மேலும் 14 நூல்கள் பதிப்பகத்தாரிடம் வெளியீட்டிற்காக உள்ளன. பேட்டி எடுத்துக் கொண்டிருந்த சமயத்திலும் 2 நூல்கள் எழுதிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.
திரு.கோமா கோதண்டத்தின் முந்தைய பதிவாக புலவர் மு.கு.ஜகந்நாதராஜா பற்றிய இரண்டு ஒலிப்பதிவுகள் முன்னர் வெளியிட்டிருந்தேன். அதனை இங்கே காணலாம். http://voiceofthf.blogspot.de/2011_06_01_archive.html அதன் தொடர்ச்சியாக இப்பதிவினை இன்று வெளியிடுகின்றேன்.
கேட்டு மகிழுங்கள்.
பதிவினைக் கேட்க!
அன்புடன்
சுபா
0 comments:
Post a Comment