யுகமாயினி மேமாத இலக்கிய கூடல் பதிவுகள்

10 - 05 - 09 அன்று மயிலாப்பூர் 'ஸ்ரீனிவாசசாஸ்திரி ஹால்' ல் நடைபெற்ற யுகமாயினி இலக்கியக் கூடல் பதிவுகள் இவை. இந்தப் பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக அனுப்பியவர் யுகமாயினி சித்தன்.





இப்பகுதியில் இடம்பெறுபவை:

1. யுகமாயினி சித்தன் வழங்கும் அறிமுக உரை.


இலக்கிய கூட்டங்கள் தனித்தனியாக சிறிது சிறிதாக நடைபெற்று வருவதும், பல இலக்கிய கூடங்கள் இலக்கிய ஆர்வலர்களுக்குத் தேவையான விஷயங்களைத் தருவதில்லை என்ற தனது ஆதங்கத்தை விளக்கி அதனைப் போக்க தரமிக்க ஒரு இலக்கிய கூட்டத்தை மாதா மாதம் நடந்த வேண்டியதன் அவசியத்தை விவரிக்கிறார். அதோடு இக்கூட்டம் நடை பெறும் தன்மையினையும் விளக்குகின்றார். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!


2. கவிஞர் ரவி சுப்ரமணியன் புதுக்கவிதையும் இசையும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை). ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!



3. வெங்கட் தாயுமானவன் - 'ஜீவனென் கவிதை' என்ற தலைப்பில் மிக ஆர்வமாகத் தனது பணிகள் பற்றியும் மின்தமிழ் வழி தான் அறிமுகம் பெற்ற நண்பர்கள் பற்றியும் விவரிக்கின்றார். (குறிப்பு: ஆரம்பப்பகுதி பதிவில் இல்லை)ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!



4. ஆய்வாளர் "இன்று" திரு.சுவாமிநாதன் - தமிழில் 'அடிமையின் மீட்சி' ம.ந.ராமசாமி அவர்களது நூல் பற்றிய ஆய்வுரை வழங்குகின்றார். (குறிப்பு: இறுதிப்பகுதி பதிவில் இல்லை) கேட்க இங்கே சுட்டுக!



பதிவுகளில் சில பகுதிகள் விடுபட்டிருந்தாலும் உரையின் பெரும்பாலான பகுதிகள் பதிவாக்கப்பட்டிருக்கின்றன. சிறந்த பேச்சுக்கள்.

கல்வெட்டுகளினால் அறியலாகும் வானசாஸ்திர குறிப்புகள்

13 - 08 - 09 அன்று அடையாறு தமிழ்ச் சங்க மாதாந்திரக் கூட்டத்தில் திருமதி. மார்க்ஸீய காந்தி “ கல்வெட்டுகளினால் அறியலாகும் வானசாஸ்திர குறிப்புகள் “ என்கிற தலைப்பில் உரையாற்றியதின் ஒலிப்பதிவு இது. இதனை பதிவு செய்து அனுப்பியவர் யுகமாயினி சித்தன். ஒலிப்பதிவைக் கேட்க இங்கே சுட்டுக!

மரபுப் பெருநாள் உரை - நா.கண்ணன்

தமிழ் மரபு அறக்கட்டளையின் 8ம் ஆண்டு நிறைவையொட்டி சென்னையில் நடைபெறும் விழாவில் (ஆகஸ்ட் 30, 2009) நா.கண்ணன் ஆற்றிய வரவேற்புரை.

இவ்வுரை கேட்க இங்கே சுட்டுக!

தீரர் சத்தியமூர்த்தி

திரு.நரசய்யா

சுதந்திர போராட்ட வீரர், தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் 123வது பிறந்த நாள் நினைவு பகிர்வு.

பதிவினைக் கேட்க

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 3


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


3.கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா

ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை

திரு.நரசய்யா

ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை நூலாசிரியர் திரு.நரசய்யா தனது ஆய்வு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு உரை நிகழ்ச்சி இது.

ஒலிப்பதிவைக் கேட்க

ஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 17



திரு.குமரன்


ஈழத் தமிழர்களின் புலம் பெயர்வு என்பது தமிழ் மக்களிடையே மிக முக்கிய சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக உலகமெங்கிலும் தமிழர்கள் இல்லாத இடமே இல்லை என்று சொல்லுமளவிற்கு தமிழர்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இப்போது வாழும் நிலை ஏற்பட்டமைக்கு ஈழத்தமிழர்களின் புலம் பெயர்வு மிக முக்கிய ஒரு காரணம். இந்த சமுதாய மாற்றத்தைப் பதிவு செய்வதற்காகவே இந்த முயற்சி.


பாகம் 17 - போருக்குப் பின் இன்றைய இலங்கயில் தமிழர்களின் நிலை குறித்த புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் பார்வை

கடலோடி நரசய்யாவின் மதராச பட்டினம் - 7

திரு.நரசய்யா
மதராச பட்டினம்- வரலாற்று சான்றுகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு முயற்சி. மதராஸ் உருவான வரலாறு, முக்கிய ஆவணங்கள், செய்திகள், என பல சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் கடலோடி நரசய்யா.
[இந்தப் பேட்டிகளை தொலை பேசி வழியாக ஒலிப்பதிவு செய்தவர் முனைவர்.க. சுபாஷிணி.]

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி உரைகள் -2

திரு.ஹரிகிருஷ்ணன்


நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]

கவியோகி வேதம்

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க

கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க

தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்க



இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு கவியோகி வேதம் (சென்னை - தமிழகம்)

உழவுத் தொழில் - 5



ஸ்ரீமதி வசந்தா


தஞ்சை கிராமத்து விவசாயிகளின் வாழ்க்கையை, நெற் பயிரிடும் முறையை சுவையாக விவரிக்கும் பேட்டிகளின் 5-ம் பாகம்.


பாகம் 5 - கிராமங்களில் பண்ணையார், மற்றும் அவர்களிடம் உழைக்கும் குடும்பத்தினர் பற்றிய சில தகவல்கள்.

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 2


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


2.அழுத பிள்ளை பால் குடிக்கும்

சைவ சித்தாந்த தத்துவ விசாரனை - 5

உலக மரபு தின விழா நிகழ்ச்சி உரைகள்

L-R-Ms. Satyabama, Supdt.Archeologist-ASI, Shri. Muthaiah (Mr.Madras!), Shri.KRA Narasaiah, Shri.Axel Saurer of German Consulate, Shri.Srinivasa Raghavan , M.D of Sundaram Finance

நிகழ்ச்சி வரவேற்புரை: Ms.Satyabama சொற்பொழிவைக் கேட்க..!

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திரு.நரசைய்யாவின் சொற்பொழிவைக் கேட்க..!

சிறப்புரை: Axel Saurer உரையைக் கேட்க..!

சிறப்புரை: ஸ்ரீனிவாச ராகவன் உரையைக் கேட்க..!

சிறப்புரை: திரு.முத்தையா உரையைக் கேட்க..!


மேலும் செய்திகள்.
மேலும் படங்கள்.

இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு.சந்திரசேகரன்(சென்னை - தமிழகம்)

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி உரைகள் -1

திரு.ஹரிகிருஷ்ணன்


நூல் வெளியீடு: கவிஞர் ஹரிகிருஷ்ணன் எழுதிய 'நினைவில் நின்ற சுவைகள்' மற்றும் கவியோகி வேதம் எழுதிய 'போகமும் யோகமும்' விழா உரைகள்: [இந்த விழா மே மாதம் 1ம் தேதி நடைபெற்றது]

கவியோகி வேதம்

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய விவேகானந்தா கல்லூரி முதல்வர் வ.வே.சுப்ரமணியம் சொற்பொழிவைக் கேட்க

கவிமாமணி மதிவண்ணன் திருப்புகழில் மிக உயர்ந்த ஆன்மீகம் என்ற தலைப்பில் உறையாற்றினார். அந்த சொற்பொழிவைக் கேட்க

தென்றல் இதழின் அமெரிக்க பதிப்பு ஆசிரியர் மதுரபாரதியின் சொற்பொழிவைக் கேட்க



இந்த ஒலிப்பதிவுகளையும் படங்களையும் மண்ணின் குரல் மாத வெளியீட்டிற்கு அனுப்பி வைத்தவர்: திரு கவியோகி வேதம் (சென்னை - தமிழகம்)

தமிழ்த்தேனீயின் பழமொழி விளக்கம் - 1


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


1.மூத்தது மோழை இளையது காளை

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness