தஞ்சை பெருங்கோயில் விளக்கம் - 2

தஞ்சை பெருங்கோயில் விளக்கம்

தஞ்சைப் பெரிய கோயிலின் கோட்டைச் சுவர், வாயில் மற்றும் அதன் வளைவு மண்டபம் ஆகியவற்றை முதல் பகுதியில் பார்த்தோம். அடுத்து உள்ள பகுதிகளைப் பற்றிய விளக்கம் இப்பகுதியில் தொடர்கின்றது.

பேட்டியைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் இப்பகுதிக்குச் செல்லவும்!

திரு. நரசய்யா - வலங்கை இடங்கை வேறுபாடுகள்

திரு.நரசய்யா

ரோஜா முத்தையா நூலகத்தில் 18-08-201o திரு நரசய்யா அவர்கள் "சென்னை நகரத்தில் இடங்கை, வலங்கை" என்ற தலைப்பில் வழங்கிய உரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

உரையைக் கேட்க

சமர்ப்பணா

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளுக்காகத் தமிழகம் சென்று வந்த போது பல்வகைப்பட்ட அனுபவங்கள் எனக்கு அமைந்தன. திட்டமிட்டு ஏற்பாடு செய்து நான் சென்று வந்த இடங்கள் சில. திட்டமிடாமலேயே திடீரென அமைந்த சில எதிர்பாராத பயணங்களும் சில. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று சமர்ப்பணாவில் நான் இருந்த சில மணி நேரங்கள்.

தமிழ் மரபு அறக்கட்டளை செயலாளர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்கள் நிச்சயமாக நான் பார்த்து வர வேண்டிய ஒன்று என்று கூறி அவர் துணைவியார் ஸ்டெல்லாவுடன் மூவருமாகச் சென்றிருந்தோம். கொளத்தூர் பகுதியில் இந்த இல்லம் இருக்கின்றது.

மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும் பெரியவர்களும் இங்கு வசிக்கின்றனர். ஏறக்குறைய 50 பேர்.

நேர்த்தியான கட்டிடம். தூய்மையாக அழகாகப் பராமரிக்கபப்டுகின்றது. நாங்கள் சென்ற போது எங்கள் வருகைப் பற்றி அவர்களுக்கு அறிவிக்கவுமில்லை .திடீரென்று சென்றிருந்தோம். குழந்தைகளும் பெரியவர்களும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அழகான சூழலில் நல்ல சிறிய தோட்டமும் இருக்கின்றது. சிறிது நேரம் இல்லத்தையும் அங்கு வசிப்பவர்களுடனும் பேசிக் கொண்டிருந்த பின்னர் பவானி அவர்களிடம் இந்த இல்லம் எப்படி உருவானது என்று கேட்டு அதனை ஒலிப்பதிவு செய்தேன்.

(ஒவ்வொரு பதிவும் ~5 நிமிடங்கள்)

பகுதி 1
- எவ்வகையான குழந்தைகள் இப்படிப்பட்ட இல்லங்களில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
- திருமதி.பவானி அவரது கணவர் திரு.ஸ்ரீதர் இருவரது கல்வி மற்றும் பயிற்சி அனுபவம்
- சம்ர்ப்பணா உருவான கதை


பகுதி 2
- மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளோடு பிரச்சனையுள்ள குடும்பங்களிலுள்ள குழந்தைகளும் இப்போது இணைத்துக் கொள்ளப்படுகின்றனர்.
- எவ்வகையான பயிற்சிகள், பள்ளிக் கல்வி இங்குள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
- குழந்தைகளின் ஒரு நாள் முழுமைக்குமான நடவடிக்கைகள்

பகுதி 3

- இங்குள்ள ஊழியர்கள், பணிகள், அவர்களுக்கான சம்பளம் பற்றிய தகவல்கள்
- சில மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைப் பற்றி குறிப்பிடத்தக்க சில நோயின்
தன்மைகள், குழந்தைகளின் உடல் நிலை, அவர்களுக்கேற்ற பிரத்தியேகப் பயிற்சிகள் பற்றி விவரிக்கின்றார்.

பகுதி 4
- இல்லக் கட்டிடத்தை பற்றி
- உணவு தயாரிப்பு, நன்கொடைகள் பற்றி இப்பகுதியில் விவரிக்கின்றார்.


பகுதி 5

- எப்படி பலர் சமர்ப்பணா நிறுவன வளர்ச்சிக்கு உதவினார்கள் என்று விவரிக்கின்றார். திரு.ஆண்டோ பீட்டரை பற்றி சில செய்திகள் பகிர்ந்து கொள்கின்றார்

- பல திட்டங்கள் இப்போது உருவாக்கத்தில் இருப்பது பற்றியும் இத்திட்டங்களின் செயல் நடவடிக்கைகளைப் பற்றியும் விவரிக்கின்றார்.

இந்த இல்லத்திற்குச் சென்று வந்தது எந்த சோகமான சிந்தனையையும் எனக்கு ஏற்படுத்தவில்லை. மகிழ்ச்சியான ஒரு சூழலை நான் அங்கு உணர்ந்தேன். இந்த இல்லத்தில் வசிக்கும் குழந்தைகளும் பெரியவர்களும் உடல் பலகீனம் என்பதை மறந்து சந்தோஷமான உரையாடல்கள், விளையாட்டு என அவர்கள் நேரத்தை செலவிடுவதை நான் அங்கிருந்த சில மணி நேரங்களில் பார்க்க முடிந்தது. பவானியும் அவர் கணவரும் தோழமையுடன் வந்திருப்பவர்களையும் அங்கு வசிப்பவர்களையும் கவனித்துக் கொள்வதைப் பார்த்த போது பாராட்டாமல் இருக்க முடியும்.

மூளை வளர்ச்சி குன்றிய மனிதர்களை சக மனிதர்களாகப் பாவித்து அவர்களையும் நம்மோடு இணைத்து செல்ல வேண்டிய கடமை நமக்கு உண்டு என்றே நான் கருதுகிறேன். பொருளாதார நன்கொடை என்பது ஒரு புறமிருக்கட்டும்.அவ்வப்போது புதிய மனிதர்கள் இந்த இல்லத்திற்கு வந்து பிறந்த நாள், திருமண நாள் என மகிழ்ச்சியான சில தினங்களை இந்த இல்லத்தில் வசிப்பவர்களோடு பகிர்ந்து கொள்ளலாமே.

சமர்ப்பணா நிறுவனர்களில் ஒருவரான பவானியுடனான பேட்டிக்குப் பிறகு அங்கிருந்து அனைவருடனும் பேசி மகிழ்ந்தோம். திரு.ஆண்டோவின் துணைவியார் ஸ்டெல்லா இங்கு தொடர்ந்து வருவதால் அவருடன் இங்குள்ள சில பெண்கள் நல்ல நட்புடன் பழகுகின்றனர். அவர்களில் லஷ்மியும் ஒருவர். அவருக்கு ஏறக்குறைய 55 வயதிருக்கலாம். மூளை வளர்ச்சி குன்றியவர் தான் இவரும். அவரோடு ஸ்டெல்லா பேசிக் கொண்டிருப்பதை கொஞ்சம் பதிவு செய்திருந்தேன். மிகச் சிறிய சுவையான அந்தப் பதிவின் ஒலிப்பதிவும் இணைக்கப்பட்டுள்ளது. கேட்டுப் பாருங்கள்.


இறுதியாக பள்ளியில் படிக்கும் ஒரு சிறிய மாணவன் ஒருவன் பவானி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றான். பயிற்சியின் மூலம் இக்குழந்தைகளுக்குக் கல்வி புகட்ட முடியும் என்பதை இவர்களது முயற்சிகள் நிரூபிக்கின்றன.

தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் தமிழகம் செல்லும் மின்தமிழ் நண்பர்களும் இந்த இல்லத்திற்குச் சென்று இங்கு வசிப்பவர்களைச் சந்தித்து வாருங்கள். உங்கள் வருகை இவர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும்.

சில புகைப்படங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன.

சமர்ப்பணா தொடர்பு முகவரி:
Samarpana
Home for Mentaly challenged and Spastics
Plot No.10. Subramani Nagar
Vinayakapuram, Near Rettaieri
Kolathur Post
Chennai - 600 099
Tamil Nadu
Phone: 65255052; cell : 928211830, 9444189133
Email: samarpana@yahoo.com

மூலிகைமணி கண்ணப்பரின் சித்த மருத்துவமுயற்சிகள் - II

கடந்த மாத வெளியீட்டில் மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள் முயற்சியில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ முயற்சிகளை விளக்கியிருந்தார். அதன் தொடர்ச்சியை இம்மாத பதிவுகளில் கேட்கலாம்.

மேலும் சில படங்களும் பதிவுகளின் விளக்கங்களும் இப்பகுதியில்
உள்ளன.


பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.அ.சுகுமாரன், சுபாஷினி




-:பகுதி 7
-:பகுதி 8
-:பகுதி 9
-:பகுதி 10
-:பகுதி 11
-:பகுதி 12
-:பகுதி 13
-:பகுதி 14
-:பகுதி 15


பேட்டி ஒலிப்பதிவு: முனைவர்.க. சுபாஷிணி .

தமிழ்த்தேனீ கவிதை


தமிழ்த்தேனீ


தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு அணில்


சுந்தரத்தமிழ்

மூலிகைமணி கண்ணப்பரின் சித்த மருத்துவமுயற்சிகள்

மூலிகை மருத்துவ நிபுணர் திரு.வேங்கடேசன் அவர்கள் தனது தந்தையார் கண்ணப்பர் அவர்கள் முயற்சியில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ முயற்சிகளை இந்தப் பேட்டிகளில் விவரிக்கின்றார். மேலும் சில் படங்களும் விளக்கங்களும் இப்பகுதியில்
உள்ளன.


பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.அ.சுகுமாரன், முனைவர்.க. சுபாஷிணி





-:பகுதி 1
-:பகுதி 2
-:பகுதி 3
-:பகுதி 4
-:பகுதி 5
-:பகுதி 6




பேட்டி ஒலிப்பதிவு: முனைவர்.க. சுபாஷிணி.

சந்தக்கவிமரபு

திரு சந்தக்கவி ராமஸ்வாமி அவர்கள் தமிழிலும்,வடமொழியிலும் உள்ள சந்தங்களை ஆய்வு செய்து, அதை நிகழ்த்து கலை மாதிரியாக ஒரு பத்து சந்தங்களைப்பாடி, ஒப்பீடு காட்டி இங்கு அளிக்கிறார். இது குறித்து அவர் திரு.ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தின் படி கீழே உள்ளது. அதில் மேற்படி விவரங்களும் தனது செல்பேசி எண்ணும் தந்துள்ளார். இந்த அவரது முயற்சிக்கு ஆதரவு அளிக்க எண்ணுவோர் அவரை நேரடியாகத்தொடர்பு கொள்ளவும்.முகவரி விவரங்கள்:

Mr Sandakkavi V S N Ramaswamy
23, Rohini Ramaniyam
West Adaiyavalainthan Street
Srirangam
Trichy 600006
cell 9790702214



தமிழ்



ஆங்கிலம்



இதுவொரு மின்தமிழ் குழுமப் பரிந்துரை!

கூத்து பட்டறை முத்துசாமி




தமிழகத்தின் தொன்மையான கலைவடிவங்களில் ஒன்று கூத்து. இன்றைய நவீன கலை உலகில் கூத்து எனும் இக்கலைக்கு உள்ள நிலை பற்றி விளக்குகின்றார் மூத்த தமிழ் எழுத்தாளர் கூத்து பட்டறை முத்துசாமி. இவர் நவீன காலத்தில் நகர மக்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரும் பங்காற்றியவர்.


பேட்டியில் பங்கு பெறுபவர்கள்: திரு.மாலன், திரு.நரசய்யா, முனைவர்.க. சுபாஷிணி







-:பகுதி 1

-:பகுதி 2

-:பகுதி 3

-:பகுதி 4

-:பகுதி 5

-:பகுதி 6

-:பகுதி 7

-:பகுதி 8


பேட்டி ஒலிப்பதிவு: முனைவர்.க. சுபாஷிணி.

சிலை மீட்ட செம்மல் - முனைவர்.நாகசாமி

ஒரு தெய்வச் சிலை எவ்வாறு தமிழகத்திலிருந்து பலவாறு கை மாறி அயல் நாடுகளின் மியூசியங்களை அலங்கரிக்கின்றன என்பதை இந்த பேட்டி விளக்குகின்றது. ஸ்கோட்லண்ட் யார்ட் காவல் துறை ஈடுபட்டு அவர்களோடு தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி அவர்களுடைய ஆய்வுத் திறமையினால் எவ்வாறு லண்டன் மியூசியத்திலிருந்து இந்த சிலை இந்தியாவிற்கு திர்ரும்பியது என்பதை ஒரு சுவாரசியமான நாவலப் படிப்பது போல விளக்குவதைக் கேட்கலாம்.





-:சிலை மீட்ட செம்மல்


பேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.

வேர்களைத் தேடி - எஸ்.பாலசுப்ரமணியம் B+

கடல் வழி ஆய்வும் குமரிக் கண்ட வாலாறும் பற்றிய தனது ஆய்வுகளை எஸ்.பாலசுப்ரமணியம் B+ பகிர்ந்து கொள்கின்றார். வேர்களைத் தேடி இவர் மேற்கொள்ளும் முயற்சிகளை அறிமுகப்படுத்தும் பதிவாக இது அமைகின்றது.




-:வேர்களைத் தேடி


பேட்டி கண்டவர்: முனைவர்.க. சுபாஷிணி.

நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும் - நெல்லை நெடுமாறன்

7-2-2010 அன்று சென்னை இந்திரா நகர் இளைஞர் விடுதியில் காலை பத்துமணிக்கு நடைபெற்ற
"நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்" என்கிற தலைப்பில் நெல்லை நெடுமாறன் ஆற்றிய உரையின் பதிவு இது.

-: நம்மாழ்வார் - வாழ்வும் வரலாறும்



பதிவு செய்து அனுப்பியவர்:யுகமாயினி சித்தன்.

பாரதியார் பாடல்கள்




-பாடல் 1: போராடக் கற்றுத் தந்தவர் யாரிங்கே?

-பாடல் 2: பச்சை மரகதப் பட்டு விரித்து படுத்து கிடக்குது இயற்கை

-பாடல் 3: மலையைக் குடைந்தெடுத்து

-பாடல் 4: கும்பிகளே ஓடிவந்து

-பாடல் 5: எட்டயபுரத்தானுக்கு


இவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக சேகரித்து வழங்கியவர் திரு.ஆண்டோ பீட்டர்.

சங்கமம் 2010 நித்யஸ்ரீ பாடல்கள்





-பாடல் 1: உன்னைக் காண கண் கோடி வேண்டும்

-பாடல் 2: எங்கள் நாட்டுகெந்த நாடு ஈடு

-பாடல் 3: களைப்படைந்தால்

-பாடல் 4: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

-பாடல் 5: குறை ஒன்றும் இல்லை

-பாடல் 6: ஜனனி ஜனனி

-பாடல் 7: சாந்தி நிலவ வேண்டும்


இப்பாடல்களை ஒலிப்பதிவு செய்து வழங்கியவர்.திரு.சந்திரசேகரன்.

கிறிஸ்மஸ் விழா


திருமதி.ஸ்டெல்லா




கிறிஸ்மஸ் விழாவிற்கு தயாராகிக் கொண்டிருக்கும் திருமதி ஸ்டெல்லா எவ்வேறு தமிழகத்தில் கிறிஸ்மஸ் விழா இந்திய பாரம்பரிய விழாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுகின்றது என்று விவரிக்கின்றார். நமது தமிழ் மரபு அறக்கட்டளையின் செயலாளர் திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் துணைவியார் இவர். இவர் இதுவரை 5 சமையல் கலை நூல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தின் தென்பகுதியான முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் இவர். இவரது சூழலில் எவ்வாறு கிறிஸ்மஸ் மற்றும் ஏனைய திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என் மிகத் தெளிவாக விவரிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

தஞ்சை வேதநாயக சாஸ்திரியார்


முனைவர்.மோஸஸ்




தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அல்லது நல்லை கவிராயர், சுவிஷேடக் கவிராயர் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக பணியாற்றும் தமிழறிஞர் முனைவர்.மோசஸ். தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் அவர்களின் நூல்களில் பல பெரும்பாலும் செய்யுள் வடிவம் கொண்டவை. -பெரும்பாலும் ஏசு பெருமானைப் பற்றிய பாடல்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் கொண்டவை. 120க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். இதில் ஏறக்குறைய 10 நூல்களே இன்று நூல் வடிவில் கிடைக்கின்றன. பல நூல்கள் கையெழுத்துப் படிகளாக உள்ளன; இன்னமும் அச்சு வடிவம் பெற வில்லை. இவரது நூல்களான பெத்லகேம் குறவஞ்சி, ஞான நொண்டி நாடகம், ஞான தச்சன் நாடகம் போன்றவை அச்சு வடிவில் வந்து புகழ்பெற்ற நூல்கள். இவரது நூல்கள் மின்பதிப்பாக்கம் பெற வேண்டும் முனைவர்.மோஸஸ் இந்த பதிவில் விண்ணப்பிக்கின்றார்.




பதிவைக் கேட்க..

Followers

THF goes blogging!

Heritage Tunes | மண்ணின் குரல் © 2008. Blog design by Randomness